Sunday, March 23, 2008

கணணி துளிகள்

1) நோட்பேடில் தொடக்கத்தில் .LOG என்று எழுதிவிட்டு அதற்கு சும்மா ஒரு ஒருபெயரிட்டு மூடிவிடவும். பின்னர் அந்த நோட்பேடை திறந்து பார்க்கவும்.

2) நோட்பேடில் டெக்ஸ்ட் அமைக்கையில் அன்றைய தேதி மற்றும் கிழமையை அமைத்திட F5கீயை அழுத்தவும்.

3) இன்டர்நெட்டில் ஒரு சைட் பாதுகாப்பானது என எப்படி அறியலாம்?
மிகவும் பாதுகாப்பான தளம் என்றால் அதன் முகவரி https:// எனத் தொடங்கும். http:// எனத் தொடங்காது. ஸ்டேட்டஸ் பாரில் சிறிய பூட்டு அடையாளம் இருக்கும்.

4) வேர்டில் பேக் ஸ்பேஸ் (Backspace) அழுத்தினால் ஒரு எழுத்து அழியும். கண்ட்ரோல் + பேக் ஸ்பேஸ் அழுத்தினால் ஒரு சொல் அழியும்.

5) இந்டர்நெட்டில் பல சொற்களை சேர்த்து தேட வேண்டுமென்று திட்டமிட்டால் ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே + அடையாளம் தர வேண்டும். உதாரணமாக ஐரோப்பாவில் கால்பந்து விளையாட்டின் சரித்திரம் குறித்து அறிய விரும்பினால் History+Football+Europe என்று எழுதி தேட வேண்டும்.

ஒரு சொல்லில் அமைந்தது மட்டுமே தேட வேண்டும் என்றால் அவற்றை மேற்கோள் குறிகளுக்குள் அமைத்திட வேண்டும். உதாரணமாக ஐரோப்பாவின் மேப் குறித்து அறிய வேண்டுமாயின் "Map of Europe" என எழுதி தேட வேண்டும்.

"and", அல்லது "or" போன்ற சொற்களையும் சேர்த்து எழுதி தேடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை தேடலின் வேகத்தைத் தடுக்கும்.

6) ஐபி நம்பரைக்கொண்டு அதற்கான முழு விபரத்தையும் தெரிந்துகொள்ள

இங்கே கிளிக்கவும்

7) இயங்கிக்கொண்டிருக்கும் புரோகிறாம்களை உடனடியாக மூடிவிட ஒரு சிறந்த இலவச மென்பொருள். இங்கே கிளிக்கவும்

8) சில வெப்சைட்டுகளில் எழுத்துக்கள் சிறியதாக அமைக்கப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் கஸ்டமாக இருக்கும். இதன் சைஸை அதிகப்படுத்தி படிக்க

வழிமுறை 1

வெப்சைட்டைப் பார்த்துக் கொண்டிருக்கையில் கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை முன்புறமாக லேசாகச் செலுத்துங்கள். எழுத்துக்கள் பெரிதாகும். மிகவும் பெரிதாகிவிட்டதா? கவலைப் பட வேண்டாம். பின்புறமாகத் திருகுங்கள். உங்களுக்குத் தேவயான அளவு எழுத்துக்கள் தோன்றியவுடன் நிறுத்தி எளிதாக வாசியுங்கள்.

வழிமுறை2

கண்ட்ரோல் பட்டனுடன் + கீயை அழுத்துங்கள். எழுத்துக்கள் பெரிதாகும். சிறியதாக்க வேண்டும் என்றால் – (மைனஸ்) கீயை அழுத்துங்கள்.

9) அழித்த பைலை (File) மீட்க வழிநீங்கள் தவறுதலாக ஏதாவது ஒரு பைலை முற்றாக அழித்துவிட்டீர்களா? அதாவது Recycle Bin இலும் இருந்து அழித்துவிட்டீகளா?கவலையே வேண்டாம் .

பின் வரும் இலவசமென்பொருளை (Fine Recovery) டவுன்லோட் செய்து அதன் மூலம் அழித்த அந்த பைலை (File) மீட்டுக்கொள்ளவும்.

Download

10) உங்களுக்கு எப்ப சங்கு ஊதப்படும் என்று நீங்களே அறிய விரும்பினால்

இங்கே கிளிக்கவும்

No comments: