அதற்கு கீழ்க்கண்ட முறையில் செயல்படவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து பின் Tools மெனுவில் கிளிக் செய்திடவும். அதில் Internet Options என்ற பிரிவிற்குச் சென்று அதில் கிடைக்கும் டாப்களில் General என்ற டாபைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Delete Cookies மற்றும் Delete files என்ற டேப்கள் இருக்கும்.
முதலில் Delete Cookies என்பதனைக் கிளிக் செய்தால் அனைத்து டெம்பரரி பைல்களும் நீக்கப்படும். பின் Clear History டாபைக் கிளிக் செய்து அண்மையில் நீங்கள் விசிட் செய்த தளங்களின் முகவரியைக் காலி செய்திடலாம்.
இதில் ஹிஸ்டரி என்ற இடத்தில் எத்தனை நாள்கள் பிரவுஸ் செய்த பைல்களை வைத்திருக்க என்ற ஒரு option கேட்கப் பட்டிருக்கும்.
தொடக்கத்தில் 20 நாட்கள் என இருக்கும். இதனை பக்கத்தில் உள்ள அம்புக் குறிகளைப் பயன்படுத்தி அதிகப்படுத்தவும் குறைக்கவும் செய்திடலாம்.
99 நாள் வரை இதனை செட் செய்திடலாம்.
1 நாள் என வைத்தால் உங்கள் இன்டர்நெட் தேடல்கள் அனைத்தும் உடனே நீக்கப்படும். பின் ஓகே செய்து வெளியேறவும்.
Sunday, March 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment