Monday, March 31, 2008

களவு செய்ய பயிற்சி

பெய்ஜிங், மார்ச் 26: "களவும் கற்று மற' என்ற பழமொழிக்கு ஏற்ப சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று தனது மாணவர்களுக்கு வங்கியில் சென்று கொள்ளையடிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கிறதாம்.

குவான்டோங் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களில் 6 பேர் கொண்ட குழு வங்கியில் 7 நிமிடத்தில் எப்படி கொள்ளை அடிப்பது என்பது குறித்து பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அறிவியல் பாடம் பயில்பவர் கள் பல்வேறு சோதனைகளை மேற் கொள்வது போல் கலைத் துறையில் பயில்பவர்களில் சிந்தனை திறனுக்கு பயிற்சி அளிக்கும் வகை யில் இந்த முயற்சி மேற் கொள் ளப்பட்டிருப்பதாக பேராசிரியர் ஹி தெரிவித்துள்ளாராம்.

இந்த பயிற்சி மேற்கொள்ளும் தங்களது மாணவர்கள் எது சரி, எது தவறு என்பதை உணர்ந்திருப்பதால் எதிர்காலத்தில் வங்கிகளை கொள்ளையடிப்பதை தங்களது தொழிலாக வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருப் பதாகவும் அவர் கூறியுள்ளாராம்.

Maalaisudar

No comments: