Monday, March 31, 2008

உதவி செய்தால் உபத்திரவம்

நியூ கேசில், மார்ச் 29: வேலியில் செல்லும் ஓணானை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்ட கதையாக ஒருவருக்கு உதவி செய்ய போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொண்டாராம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி.

தன் தாயாருடன் காரில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணி, முன்னாள் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகி ஒருவர் அடிபட்டு கிடப்பதை பார்த்தாராம்.அவரை காப்பாற்றச் சென்ற அந்தப் பெண்மணியை அந்த நபர் கண்டபடி கடித்துக் குதறிவிட்டாராம்.

தற்போது கையிலும் மூக்கிலும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம் அந்தப் பெண்மணி.

Maalaisudar

No comments: