Thursday, April 24, 2008

'பாஸ்' மார்க் போட விடைத்தாளில் 1,000 ரூபாய் நோட்டு இணைப்பு

"நான் இந்த தேர்வில் தேறாவிட்டால், எனக்கு வேலை போய்விடும். அதனால், மதிப்பெண் போட்டு தேற வைத்துவிடுங்கள்' * "ஐயா, மன்னிக்கவும், இத்துடன் 1000 ரூபாய் நோட்டு இணைத்துள்ளேன்; பார்த்து செய்யவும்'  இப்படி எல்லாம், பள்ளி இறுதித்தேர்வு விடைத்தாளில் எழுதியும், இணைத்தும் மாணவர்கள் அனுப்பியுள்ளனர். மும்பையில் பள்ளி இறுதி பொதுத்தேர்வில் இந்தாண்டு ஐந்து லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். கடந்தாண்டை விட, "காப்பி' அடித்த மாணவர்கள் எண்ணிக்கை குறைவு தான். மொத்தம் 440 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.ஆனால், விசித்திரமான சில அனுபவங்கள், விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது. சில விடைத்தாள்களில் ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், "ஐயா, என்னை இந்த முறை எப்படியாவது தேர்ச்சி பெறச் செய்து விடுங்கள்' என்று எழுதியிருந்தனர்.

சில விடைத்தாள்களில், மதச்சின்னம் போடப்பட்டிருந்தது; இன்னும் சில விடைத்தாள்களில், கடவுள் வழிபாட்டு தோத்திரங்கள், பாடல்கள் எழுதி விட்டுத்தான் பதில்கள் எழுதப்பட்டிருந்தன.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,"மதச்சின்னம் போன்ற சின்னங்கள் எதுவும் விடைத்தாளில் எழுதக்கூடாது. பதில்களை தவிர எதை எழுதியிருந்தாலும் நடவடிக்கை உண்டு. ரூபாய் நோட்டு இணைத்துஅனுப்பிய மாணவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர்.மும்பையில் கடந்த சில ஆண்டுகளாக "காப்பி' அடிப்பது மிகவும் அதிகமாக இருந்தது. கட்டுப்பாட்டை மீறிப் போனதால், கடந்த ஆண்டு கடும் நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து, மாணவர்கள் "காப்பி' அடிப்பது குறைந்தது.

No comments: