கடந்த ஆண்டு வரை பிரிட்டனின் பிரதமராக இருந்தவர், அதற்குப் பிறகும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர், இத்தனை பெருமைக்குரிய டோனி பிளேயர் ரயிலில் டிக்கெட் எடுக்கப் பணமில்லாமல் சிக்கினார் என்றால் நம்ப முடிகிறதா? இது உண்மைதான். பிரிட்டனில் சில ரயில்களில் பயணம் செய்யும்போதே டிக்கெட் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. அந்த வசதி உள்ள ரயில்களில் ஒன்று ஹீத்ரோ எக்ஸ்பிரஸ்.
இந்த ரயிலில் முதல்வகுப்பில் பிரிட்டனின் முன்னாள் பிரதமரும், மத்திய கிழக்கு நாடுகளுக்கான இன்னாள் தூதருமான டோனி பிளேர் பயணம் செய் தார். டிக்கெட் வழங்கும் அலுவலர் டிக்கெட் வாங்குமாறு கேட்டபோது, தனது பர்சை எடுத்துத் துளாவினார் பிளேர்.
அவர் முகம் வெளுத்துவிட்டது. காரணம், டிக்கெட்டுக்கு தேவையான 24.5 பவுண்டு இல்லை. இதனால் பிளேருக்கு அவமானமாகிப் போய்விட்டது. வீட்டில் எவ்வளவு பணமிருந்தாலும் கையில் டிக்கெட் வாங்கக்கூட காசில்லாததால் கீழே இறங்க வேண்டிய நிலைக்கு வந்தார். அந்த நேரத்தில் அருகிலிருந்த மற்றொரு பயணி பிளேருக்கு பணம் கொடுத்து மானத்தைக் காப்பாற்றினார்.
இந்தச் செய்தியை டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை புதன்கிழமை வெளியிட்டது. ஆனாலும், "பிளேரிடம் பணம் இருந்ததா இல்லையா என்பது தங்களுக்கு தெரியாது எனவும், சக பயணி ஒருவர் அவருக்கான கட்டணித்தை செலுத்தினார் என்பது மட்டுமே எங்களுக்குத் தெரியும்' என்றார் ஹீத்ரோ எக்ஸ்பிரஸின் செய்தித் தொடர்பாளர். ஒருமுறை ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய் ததற்காக பிளேரின் மனைவி செர்ரி அபராதம் செலுத்தினார்.
அந்த மாதிரியான செய்தியில் இப்போதுது பிளேயரின் பெயரு ம் இடம்பெற்று விட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment