Thursday, April 24, 2008

உரையாடும் கணினி!

மனிதர்களின் பேச்சு, முகபாவனைகள் ஆகியவற்றைக் கவனித்து அதற்கேற்றாற்போல் உரையாடும் கணினி தயாராகி வருகிறது. இதை உருவாக்கும் பணியில் பிரிட்டன் பெல்ஃபாஸ்ட் "க்யூன்' பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பாவின் "செமைன்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் கணினி உருவாக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் முகபாவனைகளைக் கவனித்து அதன்படி பல்வேறு வகைகளில் பதிலளிக்கும் வல்லமையை இந்தக் கணினி பெற்றிருக்கும்.

மனிதர்களுக்கு இடையேயான தொடர்புகள் அனைத்தும் உணர்வுகளால் ஆக்கப்பட்டவை. மனிதர்கள் பேசும்போது அவர்களின் முகபாவனைகள் வெவ்வேறு அர்த்தங்களைத் தரவல்லவை. இந்த தத்துவமே உரையாடும் கணினியின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. இப்போதைக்கு இந்தக் கணினி வேறு ஒரு திட்டத்தின் ஒருபகுதியாகவே உருவாக்கப்பட்டு வருவதால், வீடுகளுக்கு பயன்படுத்துவதற்கென எப்போது சந்தைக்கு வரும் எனத் தெரியவில்லை.

No comments: