Wednesday, April 9, 2008

என் பெயர் திருடன்

திருடப் போன இடத்தில் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ததால் வாலிபர் ஒருவர் வம்பில் மாட்டிக் கொண்டிருக்கிறாராம்.

கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய வாலிபர் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்து வந்த போலீசார் துப்பு கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தபோது அந்த வாலிபரின் பெயர் தெரிய வந்ததாம்.

கொள்ளையடிப்பதற்கு முன்பாக நேரத்தை போக்க அந்த வாலிபர் அங்கிருந்த வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தாராம். அதில் தன்னுடைய பெயர் ராபின்சன் என்று குறிப்பிட்டி ருக்கிறார். மேலும் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். இதனை வைத்து போலீசார் அவரை பிடித்திருக்கின்றனராம்.

Monday, 07 April, 2008

Maalaisudar

No comments: