புனித பிரதேச விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் - மன்னார் ஆயர் இல்லம் வலியுறுத்தல்
மடு மாதா ஆலயப்பகுதி படையினர் வசம்வந்துள்ளதாக தள்ளாடி இராணுவ முகாமின் கட்டளைத் தளபதி, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்புக்கு நேற்று மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மடு மாதா ஆலயத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரம் புனித பிரதேசமாகும். இந்த பகுதிக்குள் ஆயுதங்களுடன் எவரும் நடமாடக்கூடாது, தாக்குதல்களை நடத்தக்கூடாது என்ற விதிமுறையினை சகல தரப்பினரும் பின்பற்ற வேண்டும்.
இதனையே கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தும் என்று ஆயர் இல்ல வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. மடு ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மடு மாதா திருச்சுரூபம் மீளவும் ஆலயத்துக்கு கொண்டுவரப்பட வேண்டுமானால் இத்தகைய நிலை ஏற்பட வேண்டியது அவசியம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை மடு மாதா திருச்சுரூபத்தினை மீளவும் ஆலயத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்கத்தயார் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment