Saturday, April 19, 2008

இந்த 445, 455 நம்பர்களால் வந்த விணை

ஒரே நேரத்தில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இரு கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகள் யாருடையது என்பதில் சென்னை ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவம னையில் குழப்பம் - பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிசேரியன் மூலம் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தையும், மற்றொரு பெண் ணுக்கு பெண் குழந்தையும் பிறந்து, இரண்டு தாயின் டோக்கன்களும் மாறியதால் குழந்தைகள் மாறி குழப் பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு குழந்தைகளின் உறவினர்க ளும் ஆண் குழந்தை தங்களுடையது தான் எனக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
தொடரும் பிரச்னை: இரண்டு குழந்தைகளின் ரத்தப் பிரிவுகளும் பி பாசிட்டிவ்-ஆக இருப்பதால், தமிழக அரசின் தடய அறிவியல் துறையின் உதவியுடன் மரபணு (டி.என்.ஏ.) பரி சோதனை செய்து 10 தினங்களுக்குள் குழந்தைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த மெக்கானிக் இளங்கோவன் மனைவி காமாட்சி பிரசவத்துக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவருக்கு சிசேரியன் மூலம் வியாழக் கிழமை மாலை 4.59 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தையல்காரர் அன்சாரியின் மனைவி ஃபர்கத் பேகம். இவர் பிரசவத்துக்காக, ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். ஃபர்கத் பேகத் துக்கு சிசேரியன் மூலம் வியாழக்கி ழமை மாலை 5.18 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுவும் ஒலி பெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

டோக்கன்கள் மாறியதால்...: பிரசவமானவுடன், தாய் - குழந்தை இருவருக்கும் டோக்கன் கட்டப்படும்.
காமாட்சி - குழந்தைக்கு "455' என்ற டோக்கனும், பேகம் - குழந்தைக்கு "445' என்ற டோக்கனும் கட்டப்பட்டது. காமாட்சி, பேகம் ஆகியோருக்கு டோக்கன் கட்டியபோது எண்கள் மாறிப் போனதால், அவர்களை வார்டுக்கு மாற்றும்போது குழந்தைகள் மாறி குழப்பம் ஏற்பட்டது என்றார் அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் டாக்டர் மைதிலி பாஸ்கரன்.

மருத்துவ ஆவணங்கள் சொல்வது என்ன? ""எனினும் காமாட்சி, பேகம் இருவரும் வார்டுக்கு மாற்றப் பட்டவுடன், குழந்தைகளைப் பரிசோதனை செய்யச் சென்ற பிரசவம் செய்த டாக்டர்கள் டோக்கன் மாறி - குழந் தைகள் மாறி விட்டதைக் கண்டுபி டித்து விட்டனர். மேலும் பேகத் துக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்றும் காமாட்சிக்கு பிரச வத்தில் பெண் குழந்தை பிறந்தது என் றும் ஆபரேஷன் தியேட்டர் ஆவணம், பிரசவ வார்டு ஆவணம் உள்பட ஆறு இடங்களில் உள்ள ஆவணப் பதிவுகள் மூலம் டாக்டர்கள் உறுதி செய்தனர். ஆனால், இதைப் பெற் றோர் ஏற்க மறுத்து, தங்களுக்குப் பிறந்துள்ளது ஆண் குழந்தைதான் என்று கூறி வருகின்றனர்'' என்றார் டாக்டர் மைதிலி பாஸ்கரன்.

No comments: