வேலூரில் நளினியை, பிரியங்கா சந்தித்த இடம் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சை உண்மையென நிரூபிக்கப்படுமானால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவுசெய்ய முடியும் எனப்படுகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார் நளினி. இவரைக் கடந்த 19-ம் தேதி, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்தார். இச்சந் திப்பு குறித்து இரு வாரங்களுக்குப் பின் செய்தி வெளியானது. பிரியங்காவும் சந்திப்பை ஒப்புக்கொண்டார்.
ஆனால் இருவரும் எங்கே, எப்போது சந்தித்தார்கள்? சிறை விதிமுறைகளை மீறி நளினியைச் சந்தித்தாரா பிரியங்கா என்ற கேள்விகள் இப்போது எழுந்துள் ளன.
நளினியை பிரியங்கா சுமார் 19 நிமிஷங்கள் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்த விவரம் நளினியின் வழக்கறிஞர்கள் மூலம்தான் வெளியாகி உள்ளதே தவிர, என்ன பேசினோம் என்ற விவரம் பிரியங்கா தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. வேலூரில் நளினியை, பிரியங்கா சந்தித்த இடம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் பெண்கள் சிறை அருகே உள்ள "ரிகா' எனப்படும் மண்டல சிறை சீரமைப்பு பயிற்சிக் கல்லூரி (ரீஜுனல் இன்ஸ்ஸ்ட் யூட் ஆப் கரக்ஷனல் அட்மினிஸ்ட்ரே ஷன்) விருந்தினர் மாளிகையில் நளினியை பிரியங்கா சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய தென்மாநிலங்களுக்கான சிறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப் பதற்கான நிலையம் இதுவாகும். 1979-ல் மத்திய அரசால் இந்த மையம் திறக்கப்பட்டது. உத்தரப் பிரதேசம் மற்றும் தமி ழகத்தில் மட்டுமே இத்தகைய பயிற்சி மையம் உள்ளது. சிறைத்துறை அதிகாரி கள், அலுவலர்களுக்கு இங்கு குறுகியகாலப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
குளிரூட்டு வசதிகளுடன் 7 அறைகள் கொண்ட விருந்தினர் மாளிகை இம் மையத்தில் உள்ளது. நாட்டின் பல் வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஐஏ எஸ், ஐபிஎஸ் மற்றும் முக்கிய சிறை அதிகாரிகள் இங்கு தங்குவது வழக்கம்.
இந்த விருந்தினர் மாளிகை கடந்த 19- ம் தேதி மிகுந்த பரபரப்புடன் காணப் பட்டுள்ளது.
ஏராளமான கார்கள் வந்துள்ளன.காவல்துறை அதிகாரிகள் குவிந்துள்ளனர்.
இந்த பயிற்சி மையத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் இது குறித்து கேட்ட போது, சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும் தேதியில் தாம் விடுமுறையில் இருந்த தாக பதில் அளித்தார்.
தண்டனை பெற்ற கைதி ஒருவரை, நீதிபதியின் அனுமதியின்றி சிறைக்கு வெளியே ஒரு பொது இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தல், பேசுதல் சட்ட விரோதமானது. எனவே இச் செயலுக்காக பிரியங்கா, நளினி, மற்றும் சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று காவல்துறை வட் டாரங்கள் தெரிவித்தன.
முருகனை சந்தித்த நிருபர் மீது வழக்கு? வேலூர் மத்தியச் சிறையில் நளினியின் கணவர் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை முருகனை வார இதழ் ஒன்றின் நிருபர் சந்தித்தாராம். அவர் வேறு பெயரில் முருகனைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நளினி விரைவில் விடுதலை?
ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட் டது.சோனியா காந்தியின் கருணையால் இந்த தண்டனை ஆயுள் தண்டனையா கக் குறைக்கப்பட்டது. ஆயுள் தண் டனை முடிந்தும் (14 ஆண்டு சிறை) மேலும் 3 ஆண்டுகளாக நளினி சிறையில் உள்ளார். அவரது விடுதலை தொடர்பாக மத்திய உள்துறையிடமி ருந்து "தடையில்லை' என்ற சான்றிதழ் கிடைத்ததும் நளினி விடுதலை செய்யப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் அருகே பிரம்மபுரத்தில் நளினியின் குடும்பத்தினர் சொந்தமாக வீடு வாங்கியுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த முருகனின் பெற்றோர், வேலூர் வரும்போதெல்லாம் இங்கு தங்குவது வழக்கம்.
நளினியின் தாயார் நர்ஸ் பத்மாவும் தம்பி பாக்கியநாதனும் சென்னையில் உள்ளனர். வெளிநாட்டில் பயிலும் நளினியின் பெண், விடுமுறையில் சென்னை வரவுள்ளதாகவும் அப்போது வேலூர் சிறையில் உள்ள தாயாரைக் சந்திக்கக் கூடும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நளினி- முருகன் இன்று சந்திப்பு?
வேலூர் மத்தியச் சிறையில் உள்ள முருகனும், வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியும் சந்தித்துப்பேச சிறை அதிகாரிகளிடம் மனுச் செய்துள்ளனர்.
இதையடுத்து இருவரும் சனிக்கிழமை சந்தித்துப் பேச அனுமதி வழங்கப்பட் டுள்ளது.
சுமார் அரை மணி நேரம் நடைபெறும் இந்தச் சந்திப்பின்போது, சிறை அலுவலர் ஒருவரும் உடனிருப்பார்.
நளினியை, பிரியங்கா சந்தித்துப் பேசிய பிறகு நளினியும் முருகனும் 2- வது முறையாக சனிக்கிழமை சந்திக்க உள்ளனர். கடந்த 22-ம் தேதி இருவரும் சந்தித்துப் பேசியதாவும், பிரியங்காவுக்கு நன்றி தெரிவித்து நளினி கடிதம் எழுதியுள்ளதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment