திருட்டு, ஜேப்படி குற்றங்களுக்காக, பல முறை சிறைக்கு
சென்றவர்கள் உண்டு. இவரோ சுரங்க ரயில்களில் பெண்களின் பின்புறத்தை
தடவி ரசித்ததற்காக, 53 முறை சிறைவாசம் அனுபவித்துள்ளார். அந்த நபரைப்
பற்றிய சுவாரஸ்மான தகவல்கள் வருமாறு:
நியூயார்க் நகரை சேர்ந்தவர் பிரட்டி ஜான்சன் (வயது 49). சபலப் பேர் வழியான இவர், சுரங்க ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பின்புறத்தை நைசாகத் தடவி ரசிப்பார்; அதில், இன்பம் காண்பார். சுரங்க ரயில்களில், பெண்களிடம் ஆண்கள் சில்மிஷம்
செய்வது சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம் என்றாலும், இவரோ
இதுபோன்ற குற்றங்களுக்காக 53 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே செய்த குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து
விட்டு, மார்ச் 25ம் தேதி தான் ஜான்சன் விடுதலையானார். மன்ஹாட்டன்
பகுதியில் மீண்டும் அதே தவறைச் செய்து இப்போது மாட்டிக் கொண்டுள்ளார்.
ஜான்சன் பழைய குற்றவாளி என்பதால், விடுதலையான அவரை போலீசார்
சாதாரண உடையில் கண்காணித்து வந்தனர். அப்போது மீண்டும் பழைய
தவறை செய்து மாட்டிக் கொண்டார். இம்முறை ஆயுள் தண்டனை போன்ற
கடும் தண்டனை அவருக்கு விதிக்கப்படலாம் என, போலீஸ் அதிகாரிகள்
தெரிவித்தனர். ஜான்சனின் சில்மிஷ நடவடிக்கைகள் குறித்து, பல்வேறு
பத்திரிகைகளும் செய்திகள் வெளியிட்டுள்ளன. "சுரங்க ரயில் எலி' என
அவருக்கு பட்டம் சூட்டியுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment