சர்வதேச மாபியா கும்பலைச்சேர்ந்த ஒரு இலங்கை பிரஜை குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல ஆசிய நாட்டவர்களை ஒவ்வொருவரிடமும் தலா 3000 குவைத் டினாரை பெற்றுக்கொண்டு போலி கடவுச்சீட்டுகள் மூலம் ஐரோப்பாவிற்கு போக வழி செய்துள்ளார்.
இந்த இலங்கையர் ஒரு போலியான மலேசிய கடவுச்சீட்டுடன் குவைத்தில் 4 நாட்கள் தங்கிவிட்டு பிரான்ஸ் நாட்டிற்கு போக முயன்றுள்ளார்.
குவைத் விமான நிலையத்தில் இவரின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் இவரை விசாரித்ததில் இவரது கடவுச்சீட்டு போலியானது என்பதனை கண்டுபிடித்து கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment