Sunday, April 20, 2008

இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு உயிர் தப்பி வந்த அகதிகள்


இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பி 8 மணி
நேர போராட்டத்துக்கு பின், ஆறு அகதிகள் படகில் வேதாளை கடல் பகுதிக்கு
வந்தனர். இலங்கை பேச்சாளை பாரூக்(36). இவர் தனது மனைவி, நான்கு
குழந்தைகளுடன் வேதாளை கடல் பகுதியில் படகில் வந்திறங்கினார்.

பாரூக் கூறுகையில்," கடற்படையினர் கெடுபிடியால் ஆறுமாதமாக
மீன் பிடி தொழில் செய்ய முடியவில்லை. படகுக்கு தேவைப்படும்
மண்ணெண்ணெய் லிட்டர் ரூ. 87க்கு விற்கப்படுகிறது. அரிசி கிலோ ரூ. 100ம்
தேங்காய் ரூ. 65க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உழைக்கவும், பிழைக்கவும்
வழியில்லாததால் தமிழகம் வர புறப்பட்டோம். நடுக்கடலில் இலங்கை
கடற்படையினர் எங்கள் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். படகின்
இருபுறமும் துப்பாக்கி குண்டுகள் வந்து விழுந்தன. படகோட்டிகள்
வேறுதிசையில் படகை விரைவாக செலுத்தினர். எங்களை விரட்டிவந்த
கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் திரும்பி சென்றனர்.
நடுக்கடலில் 8மணி நேர போராட்டத்துக்குப்பின் நேற்று காலை 2 மணிக்கு
வேதாளை கடல் பகுதியில் வந்திறங்கினோம்' என்றார்.இவர்களிடம் கியூ
பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: