செக் குடியரசு நாட்டு அதிபர், 66 வயதில், 28 வயதான விமான பணி பெண்ணை காதலிக்கிறார். ஐரோப்பாவில் உள்ளது செக் குடியரசு நாடு. இதன் அதிபராக இருப்பவர் வாக்லவ் கலூஸ். 66 வயதான இவருக்கு மனைவியும், குழந்தைகளும் இருக்கிறார்கள். இப்போது அவர் ஒரு விமான பணி பெண்ணை காதலிக்கிறார். அவர் வயதில் பாதிக்கும் குறைவாக உள்ள அந்த பெண்ணின் பெயர் பெட்னரோவா. அவர் வயது 28 தான். அவர்கள் இருவரும் பராக் நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ஒன்றாக தங்கி இருந்தார்கள்.
இதை ஒரு பத்திரிகை துப்பறிந்து கண்டுபிடித்து போட்டோவுடன் செய்தி வெளியிட்டது. இருவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும் அது செய்தி வெளியிட்டது. அதோடு பெட்னரோவா கர்ப்பமாக இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதுபற்றி அதிபரிடம் நிருபர்கள் கேட்டபோது, இருவருக்கும் இடையே காதல் இருப்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் பெட்னரோவா கர்ப்பமாக இருக்கும் செய்தி தவறானது என்று அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment