Saturday, April 12, 2008

தீராத பசி உடைய ஜெர்மானியர்

ஜெர்மனியை சேர்ந்தவர் ஹெயின்ஸ் அஸ்தோப். 68 வயதான இவர் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மனைவி இறந்து போனது முதல் தீராப்பசி உடையவர் ஆனார். பெருந்தீனிக்காரரான இவர் தினம் 12 ஆயிரம் கலோரி உணவு சாப்பிடுகிறார். இருந்தாலும் அவர் உடலில் கொழுப்பு வைப்பதிலலை. உடல் எடை கூடுவதும் இல்லை. இது மருத்துவ உலகில் அதிசயமாக கருதப்படுகிறது. முடிவு இல்லாமல் சாப்பிடும் இவரது பழக்கம் குறித்து மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இப்படி சாப்பிடும் பழக்கம் காரணமாக அவர் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார். டி.வி. சேனல்களில் இவரது நிகழ்ச்சி அடிக்கடி ஒளிபரப்பாகி உள்ளது.

இவர் ஒரு மதுபான விடுதிக்கு சென்றபோது 100 பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்சையும் அன்றைய தினமே காலி செய்தார். இவர் இப்படி சாப்பிடுவதால் அவர் வாங்கும் பென்ஷன் பணம் எல்லாம் சாப்பிடுவதற்காக சரியாகி போய்விடுவதாக கூறி வருத்தப்படுகிறார். இவர் தினம் 40 சிகரெட்டுகளை புகைத்து தள்ளுகிறார். இந்த பழக்கத்தை விட்டுவிட வேண்டாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். புகை பழக்கத்தை அவர் கைவிட்டு விட்டால் இன்னும் அதிகமாக சாப்பிடுவார் என்று அதற்கு டாக்டர்கள் காரணம் கூறுகிறார்கள்.

No comments: