குடிகார தந்தைக்கு “கம்பெனி’ கொடுத்தால் சம்பளம் பாச மகனின் வினோத விளம்பரம்
பாருக்கு செல்லும் எனது தந்தைக்கு, “கம்பெனி’ கொடுத்தால், மணிக்கு ஏழு பவுண்ட் ( ரூ.480) கொடுக்கப்படும் !’ பிரிட்டனில், இப்படி ஒரு விளம்பர போஸ்டரை ஒட்டியுள்ளார் பாசக்கார பிள்ளை. பிரிட்டனில்,ஹாம்ப்ஷியர் பகுதியை சேர்ந்தவர் ஜாக் ஹாமாந்த்(88). மனைவியை இழந்தவர். எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மகன் மைக்கேல். ஜாக் ஹாமாந்த், வாரத்தில் நான்கு நாட்கள், பாருக்கு சென்று மது அருந்துவார். இதுநாள் வரை, அவருடன் சென்று “கம்பெனி’ கொடுத்தவர் பக்கத்து வீட்டுக்காரர்.
அவர் இப்போது இடம் மாறி சென்று விட்டார். இதனால், ஜாக் ஹாமாந்த், தனியாக அமர்ந்து மது அருந்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மகன் மைக்கேலிடம் தந்தை ஆலோசனை செய்தார். அதன் விளைவாகவே, உள்ளூர் தபால் அலுவலகத்தில், இந்த வினோத விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டது.
மது பாரில் ஏற்படும் முழு செலவையும், ஜாக் ஹாமாந்த் ஏற்றுக் கொள்வார். உடன் செல்பவர், மது அருந்தியபடி பேச்சு கொடுத்தால் போதுமானது. இதற்கு மணிக்கு ஏழு பவுண்ட் என, சம்பளம் வழங்கப்படும். இன்னும், சில நாட்களில், தகுந்த நபரை தேர்வு செய்ய உள்ளனர் தந்தையும், மகனும்!
ஒரு பெண்ணுடன் அமர்ந்து மது அருந்தும் பழக்கும் ஜாக் ஹாமாந்துக்கு கிடையாதாம். எனவே, பெண்களை தேர்வு செய்ய மாட்டோம் என மைக்கேல் தெரிவித்துள்ளார்.
தினமலர்
Saturday, April 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment