Wednesday, April 9, 2008

ஆறு வயது சிறுமிபலாத்காரம் : 72 வயது முதியவர் கைது

சாக்லெட் கொடுத்து ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 72 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் சுமதி(6). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இச்சிறுமி துவக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறாள். இதே கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ்(72).

இவர் நேற்று முன்தினம் மாலை, பள்ளி விட்டு வீட்டிற்குச் சென்ற சுமதியை வீட்டிற்கு கூப்பிட்டார். சாக்லெட்டுக்கு ஆசைப்பட்டு சிறுமியும் அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கு அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. வலியால் துடித்த சுமதி அழுது கொண்டே தனது வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் கூறியுள்ளார். காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர்.

No comments: