லண்டன்:அபாயத்தை மோப்பம் பிடிக்கும் திறன், மனிதனின் மூக்குக்கு உண்டு என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா, மாசாசூசெட்ஸ் மாகாணம், பாஸ்டனில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழத்தை சேர்ந்த வென் லி தலைமையிலான விஞ்ஞானிகள்
இதுபற்றி ஆய்வு நடத்தி, அதன் முடிவுகள், வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: சிங்கத்தின் உடலில் இருந்து வெளிப்படும் வாசனைக்கும், பூனையின் உடலில் இருந்து வெளிப்படும் வாசனைக்கும் வேறுபாடு உண்டு. சிங்கத்தின் வாசனையை முகரும் போது, அபாயம் அருகில் இருக்கிறது என்பதை உணர்ந்து தப்பித்து கொள்ளலாம். இந்த சக்தி மனித மூக்குக்கு உள்ளது என்பதை நிரூபிக்கவே, இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வில் 12 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் ஒரே மாதிரி தன்மை கொண்ட இரண்டு வாசனைகளை, முகர வைக்கப்பட்டனர்.
இதில், ஒரு வாசனையை முகரும் போது, லேசான, மின்சார "ஷாக்' கொடுக்கப்பட்டது; மற்றொரு வாசனையை முகரும் போதும் எந்த அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை.அடுத்தடுத்து, இந்த சோதனையை மேற்கொண்டபோது, மின்சார "ஷாக்'குக்கான வாசனையை முகரும் போது, அவர்களிடம் அபாயத்தை எதிர்நோக்கும் உணர்வு காணப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட போது, 12 பேரின், மூளை செயல்பாட்டை அறிய எம்.ஆர்.ஐ., ஸ்கேனும் எடுக்கப்பட்டது. மின்சார "ஷாக்'குக்கான வாசனையை முகரும் போது, மூளையின் மேற்புறத்தில் மாற்றம் காணப்பட்டதை ஸ்கேன் மூலம் அறிய முடிந்தது. எனவே, அபாயத்தை முன்கூட்டியே உணரும் தன்மை, மனித மூக்குக்கு உண்டு என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment