Wednesday, April 9, 2008

இலங்கை பெண் கைது

காலாவதியான பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய முற்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து கூறப்படுவதாவது:இலங்கைச் சேர்ந்தவர் பாத்திமா அஜிஸ் (வயது 32). இவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதாம். இதை அடுத்த அவர் ஏஜெண்ட் ஒருவரிடம் மாற்று ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

பாத்திமா அஜிஸ் இன்று அதிகாலை திருவனந்தபுரம் வழியாக சார்ஜார் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருவனந்தபுரம் வரை பயணம் செய்வதற்காக டிக்கெட் வாங்கி இருந்தாராம். விமான நிலைய சோதனைகள் முடிந்தபின் விமானத்திற்கு செல்ல ஆயத்தமானார். அதே நேரத்தில் திருவனந்தபரம் பயணம் செய்வதற்காக முத்தையா நாகம்மா (வயது 46) என்ற பெண்மணி வந்துள்ளார். அவரும் விமான நிலைய சோதனைக்குப்பின் விமானத்திற்கு செல்ல ஆயத்தமானார்.

அப்போது பாத்திமா அஜிசும், முத்தையா நாகம்மாவும் பாதுகாப்புப் பகுதியில் சந்தித்தார்களாம். அப்போது பார்த்திமா அஜிஸ் தன்னுடைய போர்டிங் கார்டை முத்தையா நாகம்மாவிடம் கொடுத்துவிட்டு அவருடைய போர்டிங் கார்டை பெற்றுக்கொண்டாராம்.

இதை மத்திய தொழில் படையைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இரண்டு பேரையும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகிலன் கைது செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து இருவரையும் போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

Maalaisudar Wednesday, 09 April, 2008

No comments: