பழநியில் 9 வயது சிறுமியை கற்பழித்த 50 வயது முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையை விரைவு கோர்ட் உறுதி செய்தது.
பழநி அப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (50). இவர் மனைவி கலாவிடம் பழநி வ.உ.சி., தெரு வை சேர்ந்த 9 வயது சிறுமி டியூசன் படிக்க வந்துள்ளார். ஜெயச்சந்திரன் தனது மனைவி வீட்டில் இல்லாத போது, கடந்த 4.11.2003ல் டியூசன் படிக்க வந்த சிறுமியை கற்பழித்துள்ளார்.
இது குறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து பழநி சப்கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், சிறுமியை கற்பழித்த ஜெயச்சந்திரனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இது குறித்து ஜெயச்சந்திரன் திண்டுக்கல் விரைவு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகைய்யன் சப்கோர்ட் தண்டனையை உறுதி செய்தும், சிறுமியை கற்பழித்தவரை கைது செய்யவும் உத்தரவிட்டார்.
தினமலர்
Saturday, April 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment