யுத்தம் காரணமாக இராக்கிலிருந்து வெளியேறி சிரியாவில் ஏழ்மையில் வாடும் இராக்கிய அகதிகள் பிழைப்புக்காக பாலியல் தொழிலில் இறங்கிவரும் அவலநிலை நிலவுகிறது.
சிரியாவில் தங்கியிருக்கின்ற சில அகதிக் குடும்பங்கள் உணவுக்காக, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள்.
தற்போது சிரியாவில் 15 லட்சம் இராக்கியர்கள் வாழ்கிறார்கள், இவர்களில் பெரும்பாலானோர் அண்மைய வருடங்களில் ஏற்பட்ட மோதல்களால் இடம்பெயர்ந்து இங்கு வந்து தங்கியிருப்பவர்களாவர்.
இவர்களில் எத்தனைபேர் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்த சரியான புள்ளிவிபரங்கள் இல்லாதபோதிலும், தற்போது அதிகரித்து வரும் கவலைகளுக்கான ஒரு முக்கிய காரணமாக இந்த விவகாரம் திகழ்வதாக டமாஸ்கஸில் இருக்கின்ற ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment