Saturday, April 19, 2008

மாடல் அழகி பரபரப்பு தகவல்



"மனதுக்குப் பிடித்தவருடன் வாழ உரிமை உள்ளது. முதல் கணவர் விபத்தில் இறந்து விட்டார். இரண்டாவது கணவரை விவாகரத்து செய்து விட்டேன். மூன்றாவது கணவர் சுகுமார் ஜார்ஜ்' என, சென்னை தொழில் அதிபரை ஏமாற்றிய விவகாரத்தில் சிக்கிய ஐதராபாத் மாடல் அழகி சிமிகுமார் கூறினார்.



சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் சுகுமார் ஜார்ஜ் கொடுத்த மோசடி புகாரில் கைதாகி, ஜாமீனில் வெளியில் வந்த சிமிகுமார், கோர்ட் உத்தரவுப்படி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.நேற்று காலை, சிமிகுமார் வக்கீலுடன் போலீஸ் நிலையம் வந்து கையெழுத்திட்டார். நிபந்தனை ஜாமீனில் இருந்து விலக்கு அளிக்க கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிமிகுமார் அளித்த பேட்டி வருமாறு: எனது தந்தை, ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.எனது சகோதரரும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். சிறுவயதில் இருந்தே, அழகி பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. பள்ளி கல்லூரி படிப்பின் போது, மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றிய, லீத் சூர்த் என்பவரை திருமணம் செய்தேன்; அவர் விபத்தில் இறந்து விட்டார். எனக்கு 15 வயதில் மகள் இருக்கிறாள். சில ஆண்டுகள் கழித்து, ராணுவத்தில் கர்னலாக பணியாற்றிய ரவிக்குமார் மேனனை திருமணம் செய்தேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன்."மிசஸ் ஐதராபாத்' அழகி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, மாடலிங் துறையில் அதிக வாய்ப்பு கிடைத்தது. முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வந்தேன். அதில், அதிக வருமானம் கிடைத்தது.

சுகுமார் ஜார்ஜ், இன்டர்நெட் "சாட்டிங்' மூலம் பழக்கமானார். முதலில் நண்பர்களாகப் பழகினோம். பின்னர், எனது வாழ்க்கையில் பலவித கஷ்டங்கள் ஏற்பட துவங்கின.சுகுமார் ஜார்ஜ் திருமணமானவர். மனைவியைப் பிரிந்து சென்னையில் வசித்து வந்தார். இருவரும் விரும்பி தான், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். மாடலிங் துறையில் பிரபலமாக இருந்த என்னை, "யாரிடமும் பேசக் கூடாது' என, சுகுமார் ஜார்ஜ் தடை விதித்தார்.சுதந்திரமாக வாழ்ந்த எனக்கு, இதை ஏற்க முடியவில்லை. அவரை விட்டு விலகவும் முடியாமல், சேர்ந்து வாழவும் முடியாமல் தவித்தேன். எங்களது திருமணம் ஐதராபாத்தில் நடந்தது. ஓட்டலில் தங்கிய எனக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார். அதனால் தான், செல்ல நாய்க்கு உடம்பு சரியில்லை என பொய் கூறி, அவரிடம் இருந்து விலகி சென்றேன். சுகுமார் ஜார்ஜ் சென்னைக்கு வந்து விட்டார். அதன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஐதராபாத் வாடகை வீட்டில் சில நாட்கள் என்னுடன் அவர் வாழ்ந்தார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் அவர் மீது, ஐதராபாத் போலீசில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.எனக்கு, சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றினார். சட்டப்படி, எனது மூன்றாவது கணவர் சுகுமார் ஜார்ஜ். எங்களது மீதான விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவரது சொத்தில் எனக்கு உரிமையுள்ளது.



போலீசில் புகார் கொடுத்து ஐதராபாத் கோர்ட்டிற்கு இழுத்ததால், ஆத்திரம் அடைந்து, சென்னை போலீசில் புகார் கொடுத்து, என்னை அலைக்கழித்து, அசிங்கப்படுத்தி வருகிறார். என் மீது தொடரப்பட்ட திருட்டு மற்றும் மோசடி வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார். என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மாடலிங் துறையில் உள்ள புகழை சீரழிக்கும் வகையில் எனது மாஜி கணவர் பேசியுள்ளார். தனிப்பட்ட முறையில் என்னை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை; அவரை சும்மா விட மாட்டேன்.எனக்கு பிடித்தவருடன் வாழ எனக்கு உரிமையுள்ளது. ஒரு பெண் மூன்று ஆண்களை, ஒரே நேரத்தில், திருமணம் செய்தால் தான் தவறு. விவாகரத்து பெற்ற பெண், விரும்பிய ஆணை திருமணம் செய்வதில் தவறில்லை. எனது பிரச்னை குறித்து தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழக கவர்னருக்கு புகார் மனு அளித்துள்ளேன். இவ்வாறு சிமிகுமார் கூறினார்.

தொடர்புபட்ட செய்தி: இன்டர்நெட் பழக்கம் விபரீதத்தில் முடிந்தது

No comments: