Sunday, April 27, 2008

எவராவது பாராளுமன்றத்தை கலைக்க முயற்சிப்பின் அவரது கைகள் முறிக்கப்படும்

"பாகிஸ்தானின் புதிய பாராளுமன்றத்தைக் கலைக்க எவராவது முயற்சிப்பின், அவரது கைகள் முறிக்கப்படும்" என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இதன்போது எவரையும் பெயர் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுக்கவில்லை என்றபோதும், அவர் மறைமுகமாக ஜனாதிபதி முஷாரப்பை குறி வைத்தே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஏற்கனவே கூட்டமைப்பு அரசாங்கத்தால் இணக்கம் காணப்பட்ட காலக்கெடுவுக்கு அமைய, ஜனாதிபதி முஷாரப்பால் பணி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை நாளை மறுதினம் புதன்கிழமைக்குள் மீள அவரவர் பதவிகளுக்கு நியமனம் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் நவாஸ் ஷெரீப் இதன்போது வலியுறுத்தினார்.

அரசாங்கம் நீதிபதிகளை மீள அவரவர் பதவிகளுக்கு நியமனம் செய்யத் தவறுமாயின், தமது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக நேரிடும் என நவாஸ் ஷெரீ ப்பின் கட்சியைச் சேர்ந்த தலைவர்களிலொருவரான ஜாவீத் ஹஷ்மி அச்சுறுத்தல் விடுத்து ஒரு நாள் கழித்து, நவாஸ் ஷெரீப்பின் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஷாரப் தொடர்பில் ஷெரீப் குறிப்பிட்டுக் கூறுகையில்,

"கண்டனத் தீர்மானத்தை தவிர்ப்பதற்கு அவர் பதவி விலக வேண்டும்" என்று தெரிவித்தார்.

No comments: