
சர்ச்சைக்குரிய ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 32 வயது மொடல் அழகியை காதலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தானின் கவிதைகள் எனும் நாவலை எழுதியதற்காக பெரும் சர்ச்சையில் சிக்கிய ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 4 முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்துச் செய்தவர்.
பத்மா லட்சுமி
கடந்த ஓராண்டுக்கு முன்னர் அவர் தன்னுடைய 4 ஆவது மனைவியான மொடல் அழகி பத்மா லட்சுமியை விவாகரத்துச் செய்தார்.
இந்நிலையில், தற்போது 32 வயதான மொடல் அழகி அய்மி முல்லின்ஸ் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அண்மையில் இவர்கள் இருவரும் நியூயோர்க்கில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அப்போது மொடல் அழகி அய்மி முல்லின்ஸ் தங்களிடையே நெருக்கமான உறவு இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் மன்ஹாட்டனில் உள்ள சோஹோ கிராண்ட் ஹோட்டலுக்கு இருவரும் ஜோடியாக வந்தனர். சல்மான் ருஷ்டி காதலியின் தோளில் கை போட்டபடியே வந்தார்.
சல்மான் ருஷ்டியுடனான நட்புக் குறித்து அய்மி கூறுகையில்;
நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நெருங்கிய நண்பர்கள்.
இன்று முழுவதும் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம். காலையில் ஒரு படம் பார்த்தோம். அவரும் நானும் சேர்ந்து மது அருந்தினோம். நான் குறைவாகத்தான் அருந்தினேன். இருந்தாலும் இன்று முழுவதும் சுற்றிக் கொண்டே இருக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
அய்மியின் பெற்றோர் அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள். உழைக்கும் வகுப்பைச் சேர்ந்தவர்கள். பின்னர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர்கள். ருஷ்டியை விட 28 வயது குறைந்தவர் அய்மி.
பிறந்தபோதே அவரது கால்களில் எலும்புகள் வளர்ச்சி இல்லாமல் இருந்தன. இதனால், ஒரு வயதாக இருக்கும்போதே முழங்கால்களுக்கு கீழே இரு கால்களையும் மருத்துவர்கள் துண்டித்து எடுத்து விட்டனர். அதன் பின்னர் அவர் செயற்கைக் கால்களுடன் வாழ்ந்து வருகிறார். இருப்பினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல் மன வலிமையாலும், முயற்சியாலும் தடகள வீராங்கனையாக மாறினார் அய்மி.
1996 ஆம் ஆண்டு நடந்த உடல் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் , 200 மீட்டர் ஓட்டம் , நீளம் தாண்டுதலில் புதிய உலக சாதனைகளைப் படைத்தவர் அய்மி. மிகச் சிறந்த ஊனமுற்ற தடகள வீராங்கனை என்ற பாராட்டுகளையும் பெற்றார். இதுதவிர மாடலிங்கிலும் கலக்கி வருகிறார் அய்மி. ஏகப்பட்ட கேட் வாக் நிகழ்ச்சிகளில் அய்மியைக் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment