மணிப்பூர் மாநிலத்தில் எச்.ஐ.வி. பாதித்த ஒருவர் ஆணழகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அங்குள்ள எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர். 37 வயதாகும் இவர் அங்கு நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவருடைய தைரியமும், மனோவலிமையும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, மணிப்பூர் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் பிராண்ட் அம்பாசடராக பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், எய்ட்ஸ் நோய் குறித்து தான் அச்சப்படவில்லை என்றும், இதேபோல், இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment