Wednesday, April 9, 2008

திருடா... திருடா...

செக் குடியரசு நாட்டில் திருட வந்த வாலிபரை விருந்தோம்பல் மூலம் பெண்மணி ஒருவர் வீழ்த்தி இருக்கிறாராம்.

அந்த பெண்மணி பணியாற்றிக் கொண்டிருந்த கடையில் முகமூடி யோடு நுழைந்த அந்த வாலிபர் துப்பாக்கியை காண்பித்து பணத்தை எடுக்குமாறு மிரட்டினாராம்.

ஆனால் அந்த அம்மணியோ மிரண்டு விடாமல், உன்னை பார்த்தால் நல்லவன் போல தோன்றுகிறதே, ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டபடி பேச்சு கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து வாலிபரோடு பேசியபடி, காபி சாப்பிடும்படியும் அவர் கேட்டிருக்கிறார். அதனை ஏற்றுக் கொண்ட வாலிபர், காபியை வாங்கி பருகி விட்டு திருட வந்ததற்காக மன்னிப்பு கேட்டு கொண்டு வெளியேறிச் சென்று விட்டாராம்.

Monday, 07 April, 2008

Maalaisudar

No comments: