திரைப்படத்தை பார்த்து திருட முற்பட்ட தென்கொரிய வாலிபர் வசமாக சிக்கிக் கொண்டிருக் கின்றனராம். அந்த வாலிபர் கடன் சுமையில் தள்ளாடி வந்ததால், அதிலிருந்து மீளுவதற்கான வழியை தேடிக் கொண்டிருந்தாராம்.
இந்த நேரத்தில்தான் மிஷன் இம்பாசிபுள் எனும் திரைப்படத்தை பார்த்தாராம். இந்தப் படத்தில் நாயகன் டாம்குரூஸ் நகைக் கடை ஒன்றின் கூரை மீதிலிருந்து கயிறு கட்டி இறங்கியபடி அங்கிருக்கும் நகைகளை எல்லாம் அள்ளிச் செல்வாராம்.
அந்த வாலிபரும் இதே போல நகைக்கடை ஒன்றில் கூரையி லிருந்து கயிறு கட்டி கொள்ளை நிகழ்ச்சியில் ஈடுபட்டாராம். ஆனால் அவரது போதாத நேரம் நகைகள் மீது கைவைத்ததுமே எச்சரிக்கை மணி ஒலித்து காவலர்கள் அவரை பிடிக்க ஓடி வந்து விட்டனராம்.
Tuesday, 08 April, 2008
Maalaisudar
Wednesday, April 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment