Saturday, April 19, 2008

இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்தவர்கள் கைது

இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து கொடுத்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஏராள மான போலி பாஸ்போர்ட்கள், போலி விசாக்கள், போலி முத்தி ரைகள் பறிமுதல் செய்யப்பட் டன. இதுபற்றிய விவரம்: சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி பசும்பொன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் "போலி பாஸ்போர்ட்' தயாரிப்ப தாக மத்தியக் குற்றப் பிரிவு போலீ ஸýக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் துணை கமிஷனர் விஜயகுமாரி, உதவி கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் ஆரோக்யப் பிரகாசம், சப்-இன்ஸ் பெக்டர் மஞ்சுளா ஆகியோர் கொண்ட தனிப்படை விசாரித்து வந்தது.

விசாரணையில், அந்த வீட்டில் இருந்த வித்யா சரவணன் மற்றும் மூர்த்தி ஆகியோர் இணைந்து இலங்கையைச் சேர்ந்த பலருக்கு பாஸ்போர்ட்டில் திருத்தம் செய் தும், போலி விசாக்களை தயா ரித்து கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை போலீ ஸôர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர்.
"இலங்கையைச் சேர்ந்த குமார், குட்டி, செல்வரத்தினம், தமிழகத்தைச் சேர்ந்த சலீம் சேத்தி, ராமமூர்த்தி ஆகியோருக்கு பாஸ் போர்ட்டில் திருத்தம் செய்து கொடுத்துள்ளனர். எந்த நாட் டிற்கு செல்கிறார்களோ, அந்த நாட்டின் விசாவை கம்ப்யூட்டர் மூலமாகப் போலியாகத் தயாரித்து கொடுத்துள்ளனர்.

அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு போலி விசாக்களை கம்ப்யூட்டரில் தயாரித்து கொடுத் துள்ளனர். அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட்கள் 53-ம், போலி விசாக்கள் 40-ம், போலி முத்திரைகள் 48-ம் பறிமுதல் செய் யப்பட்டன' என்றார் இன்ஸ்பெக்டர் ஆரோக்யபிரகாசம்.

No comments: