அமெரிக்க சட்ட தரணி நடவடிக்கை
யூகோஸ்லோவியாவின் முன்நாள் அரச தலைவர் ஸ்லோபோடன் மிலோசவிக்கு எதிராக அந்நாட்களில் தயாரிக்கப்பட்ட குற்றப் பத்திரிகை போன்று, இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ , அவரது சகோதரர்கள் , இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கான குற்றப்பத்திரிகை ஒன்றை அமெரிக்க சட்டத்தரணி ப்ரூஸ் பெய்ன் தயாரீத்து வருவதாக அமெரிக்கச் செய்திகள் தெரிவித்துள்ளதாக இணையத்தளம் ஒன்று தகவல்களை கசிய விட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களான கோத்தபாய, அமெரிக்காவில் பச்சை அட்டை பெற்றவரான பசில் மற்றும் சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் ப்ரூஸ் பெய்ன் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக நம்பகமாக தெரியவரும் இதேவேளை அமெரிக்காவின் முன்நாள் அதிபர் றொனால்ட் றீகனின் ஆட்சிக் காலத்தில் பிரதி சட்டமா அதிபராக ப்ரூஸ் பெய்ன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment