Monday, April 21, 2008

நளினி சந்திக்க மறுத்ததால் ராஜீவ் கொலையாளி முருகன் திடீர் உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதான கைதிகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன், பேரறி வாளன், சாந்தன் தூக்கு தண்டனை கைதிகளாக ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி பெண்கள் சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை அனுபவித்து வருகிறார்.

நளினியை கடந்த மோதம் 19-ந்தேதி ராஜீவ்காந்தி சோனியாவின் மகள் பிரியங்கா சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பை பிரியங்காவும் ஒத்துக் கொண்டுள்ளார்.

பிரியங்கா நளினியை சந்தித்த பிறகு தான் நளினி தனது கணவன் முருகனிடம் கூறியுள்ளார். அப்போது அவர் பிரியங்காவிடம் பேசிய முழுவிபரத்தையும் சொல்ல வில்லையாம்.

இதனால் ஆதங்கத்தில் நளினியுடன் இருந்த சந்திப்பிலிருந்து முருகன் பாதியில் வெளியே வந்துவிட்டார். மீண்டும் அடுத்து நளினியை சந்திக்கவும் மறுத்து விட்டார்.

மேலும் பேரறிவாளனை சந்திக்க வந்த அவரது தாயார் அற்புதத்திடம் பேசிய முருகன் நளினியோடு பிரியங்கா பேசியதை பத்திரிக்கைகளில் படித்துதான் தெரிந்து கொண்டேன் என்று வருத்தப் பட்டு கூறினாராம்.

இதனால் இருவருக் கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நளினியை சந்திப்பதை முருகன் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் நளினி முருகன் சந்திப்பு நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த தடவை நளினியை சந்திக்க முருகன் ஆர்வமாக இருந்தாராம். நளினியை சந்திக்கவும் சிறை அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதற்காக தயார் நிலையில் முருகன் இருந்தார். ஆனால் பெண்கள் சிறையில் உள்ள நளினி கணவர் முருகனை சந்திக்க மறுப்பு தெரிவித்தாக கூறப்படு கிறது. இதனால் நளினி-முருகன் சந்திப்பு நடைபெறவில்லை. இதையடுத்து முருகன் விரக்தியடைந்தார்.

இதனால் நேற்று முன்தினம் முதல் அவர் விரக்தியுடன் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். மேலும் நேற்று காலையி லிருந்து அவர் சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது

இந்த திடீர் உண்ணா விரதத்தால் சிறை துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த உண்ணாவிரதம் குறித்து ஜெயில் சூப்பிரண்டு நாராயணமூர்த்தியிடம் போனில் தொடர்பு கொண்டால் அவரிடம் பேச முடியவில்லை. ஜெயில் அலுவலகத்தில் கேட்டால் அவர்கள் அதுபோன்ற தகவல் எதுவும் இல்லை. இருந்தாலும் நீங்கள் ஜெயில் சூப்பிரண்டிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினர்.

No comments: