மும்பை:பக்கத்து வீட்டு 18 மாத குழந்தையை கொஞ்சிய படி வீட்டுக்கு துõக்கிவந்து, கொடூரமாக கற்பழித்த மகனை போலீசில் ஒப்படைத்தது மட்டுமில்லாமல், கோர்ட்டில் ஒரே சாட்சியாக நின்று, தண்டனையும் வாங்கித்தந்தார் தந்தை.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் தாராவி பகுதியில் வசிப்பவர் முஷ்டாகின் கான்; ரியல் எஸ்டேட் ஏஜென்ட். இவர் மகன் மொயின் கான். வேலை செய்யாமல் ஊர் சுற்றி வந்தவர். கடந்த 2005 ஜனவரி மாதம், பக்கத்து வீட்டு 18 மாத குழந்தையை கொஞ்சியபடி வீட்டுக்கு அழைத்து வந்தார் மொயின் கான். அடுத்த சில நிமிடங்களில், அந்த குழந்தையை மொயின் கான் கற்பழித்துக்கொண்டிருந்ததை பார்த்து தந்தை முஷ்டாகின் கான் அதிர்ச்சி அடைந்தார். அப்போதே அந்த குழந்தை மயங்கி கிடந்தது. அந்த குழந்தையை கற்பழித்த மொயின் கான், உடனே அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றான்; அவனை தடுத்து, "அடப் பாவி, பிஞ்சுக்குழந்தையிடம்... சீச்சீ! உன்னை போலீசில் பிடித்துக்கொடுக்காமல் விட மாட்டேன்' என்று அறையில் மகனை அடைக்க முயன்றார்.
தந்தையை தள்ளி விட்டு,வீட்டை விட்டு ஓடிவிட்டான் மொயின் கான். போலீசில் புகார் செய்த முஷ்டாகின் கான், "வீட்டுக்கு வந்தால் மொயின் கானை கண்டிப்பாக ஒப்படைக்கிறேன்; சாட்சியாக நானே கோர்ட்டுக்கு வருகிறேன்' என்று சொல்லி, மொயின் கான் வழக்கமாக போகும் இடங்களை போலீசில் சொன்னார். பல இடங்களில் தேடிய போலீசார், மறுநாள் மொயின் கானை பிடித்து கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் வெளியே வந்த அவன், வீட்டுக்கு சென்றால் தந்தையுடன் மோத வேண்டும் என்று எண்ணி தலைமறைவாகி விட்டான். போலீசார் மீண்டும் மொயின் கானை தேடி, சில நாளில் அவரை பிடித்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவனுக்கு ஜாமீன் அளிக்காமல், சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2006 ம் ஆண்டு இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் நிலையில், குழந்தையுடன் பெற்றோர் , ஊரை விட்டு காணாமல் போய்விட்டனர். அவர்களை மொயின் கான் தான் மிரட்டி, ஊரை விட்டு வெளியேற்றி விட்டதை முஷ்டாகின் தெரிந்து கொண்டார். வழக்கை விசாரித்த அரசு பெண் வக்கீல் உஷா மகசரேயை சந்தித்து, "என் மகன் அந்த பிஞ்சுக்குழந்தையை கற்பழித்ததை நான் பார்த்தேன். அவனுக்கு தண்டனை வாங்கித்தந்தால் தான் என் மனது ஆறுதல் அடையும்; அவனை பெற்ற பாவத்தை கழுவ முடியும்' என்று சொன்னார். அவரின் சாட்சியத்தை அடிப்படையாக வைத்து, மொயின் கானுக்கு பெண் நீதிபதி சுவ்ப்னா ஜோஷி, பத்தாண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment