இந்து மத நம்பிக்கையுடன் சம் பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதை இடிப் பதில் முதல்வர் கருணாநிதி காட்டும் ஆர்வத் திற்கு "மதச்சார்பின்மை' என்ற பெயர் போலும் என மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி கூறி யுள்ளார்.
விவேகானந்தர் இல்லத்தை இடித்துவிட்டு தமிழ் செம்மொழி மையத்தை அமைக்க அரசு முயற்சிப்பது தொடர்பாக "தினமணி' வெளி யிட்ட செய்தி குறித்து அவர் தெரிவித்த கருத்து கள்: செம்மொழி ஆய்வு மையம் அமைப்பதற்குச் சென்னையில் பல இடங்கள் இருக்கின்றன.
குறிப்பிட்ட இடத்தில்தான் அதைத் தொடங்க வேண்டும் என்ற அவசி யம் இல்லை. ஆனால், விவேகானந்தர் இல்லம் அப்படியல்ல. இந்தியா வின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான அவர் தங்கிய இடம் என்பதால்தான் அந்த இடமே ராமகிருஷ்ணா மிஷனுக்குத் தரப்பட்டது.
சென்னை பக்கமே எட்டிப் பார்த்திராத கண்ணகிக்கு குறிப்பிட்ட இடத்தில்தான் சிலை இருக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டிய முதல்வர், விவேகானந்தர் தங்கியிருந்த இடத்தில் அவருடைய பெயரில் ஓர் இல்லமும், கண்காட்சி அரங்கமும் நடப்பதை ஏன் குலைக்க முயல்கி றார் என்று தெரியவில்லை.
இந்துமத நம்பிக்கைகளுடனோ, சிந்தனைகளுடனோ சம்பந்தப்பட்ட ஏதாவது ஓர் இடம் இருந்தால் -அது ராமர் பாலமாக இருந்தாலும் சரி, விவேகானந்தர் இல்லமாக இருந்தாலும் சரி -அதை இடித்துவிட வேண் டும் என்பதில் முதல்வர் காட்டும் ஆர்வத்திற்கு மதச்சார்பின்மை என்ற பெயர்போலும்.
தமிழக அரசு செய்ய முயற்சிக்கும் செயல் சட்ட ரீதியாகவும் சரி, தார் மிக ரீதியாகவும் சரி -ஏற்றுக்கொள்ள முடியாதது.
"எழுங்கள், விழிப்புணர்வு கொள்ளுங்கள்' என்பது விவேகானந்தரின் வாக்கு. முதல்வரின் கண்டிக்கத்தக்க போக்கு குறித்து தமிழகத்தின் நலன் விரும்புவோர் அனைவரும் இந்த உணர்வைப் பெற வேண்டும் என்றார் சோ ராமசாமி.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment