Tuesday, April 22, 2008

ராஜிவ் கொலையாளிக்கு சிம் கார்டு சப்ளை :வேலூர் சிறையில் 'தாராளம்'

ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி முருகன் தினமும் சிறையில் இருந்தபடியே மொபைல் போனில் பேசியது, விசாரணையில் தெரியவந்துள்ளது. சிம் கார்டை பறிமுதல் செய்தனர். குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள், பிரபல ரவுடிகள், ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட முக்கிய கைதிகள் உள்ள வேலூர் மத்திய சிறைக்கு பல மடங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அதில் மொபைல்போன் சிம் கார்டை அதிகாரிகள் கைப்பற்றினர்.



இந்த சிம் கார்டை பயன்படுத்தி கைதிகள் தினமும் 240 முறை பேசியுள்ளனர். ராஜிவ் கொலையாளி முருகன், சிறைக்குள் மொபைல் போனை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த மொபைல்போனை, அவரது சிறை நண்பர் முத்துராமன் என்பவர் வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. சிறைக்கைதிகள் தங்களுக்கு வேண்டியவர்களுடன் பேச வசதியாக, சில சிறை அதிகாரிகள், போலி முகவரி கொடுத்து சிம் கார்டு வாங்கி பயன்படுத்தியுள்ளனர். உள்ளூரில் ஒரு கால் பேச ரூ.10, வெளியூர் பேச ஒரு காலுக்கு ரூ.50 என கட்டணம் வசூலித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: