Tuesday, April 22, 2008

ஏற்புடையதல்ல

விவேகானந்தர் இல்லத்தை காலிசெய்ய தமிழக அரசு கொடுத்துள்ள திடீர் நெருக் கடி அதிர்ச்சி அளிக்கிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறி னார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: "ராமகிருஷ்ண மடம் நிர்வகித்து வரும் "ஐஸ் ஹவுஸ்" என்று அழைக்கப்படும் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றச் சொல்லி, அதுவும் மூன்று நாட்களில் காலி செய்ய வேண் டும் என்று தமிழக அரசு திடீர் நெருக்கடி கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

1997-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதிதான் அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தார். குத்தகை காலம் 2010-ம் ஆண்டுவரை இருக்கும்போது அவரே இந்த முடிவை அறிவித்திருப்பது ஆச்ச ரியத்தைத் தருகிறது.

சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய பிறகு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 15 வரை ஒன்பது நாட்கள் விவேகானந்தர் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார்.
இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை புராதன நினைவுச் சின்னமாக போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

விவேகானந்தர் ஆன்மிகவாதி என்பதைக் கடந்து, சமூக ஒழுக் கத்தை வலியுறுத்திய சமுதாய சிற்பி.

தமிழ் செம்மொழி மையம் அமைப்பதற்காகவோ அல்லது வேறு எந்த உபயோகத்திற்கோ இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை இடிப்பது ஏற்புடையதல்ல.

எனவே இந்த அவசர முடிவை மாற்றி, விவேகானந்தர் அருங்காட்சியகம் அதே இடத்தில் தொடர்ந்து இயங்க தமி ழக அரசு ஆவன செய்ய வேண்டும்' என்று சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

No comments: