Wednesday, April 9, 2008

நேருக்குநேர் உட்கார்ந்து கொண்டு ஓட்டும் சைக்கிள்

சைக்கிளில் இப்போது 2 பேர் பயணம் செய்தால், ஒருவர் முன்னால் உட்கார்ந்து கொண்டும் இன்னொருவர் அவருக்கு பின்னால் உட்கார்ந்துகொண்டும் செல்வார்கள். இதை மாற்றி, இருவரும் ஒருவரை பார்த்துக்கொண்டு ஓட்டும்படியான சைக்கிள் உருவாக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சைக்கிளை தைவான் நாட்டைச்சேர்ந்த சென் யுகாங் உருவாக்கி இருக்கிறார். இவர் டாய்னான் நகரில் உள்ள பார் ஈஸ்ட் பல்கலைக்கழகத்தில் படைப்பு உருவாக்கத்தின் இயக்குநராக இருக்கிறார். அவர் ஒரு ஆண்டுகாலம் செலவிட்டு இந்த சைக்கிளை உருவாக்கி இருக்கிறார்.

எந்த திசையில் வேண்டுமானாலும் செல்வதற்கு வசதியாக கியர்கள் இருக்கும். கியர்களை மாற்றுவது எளிது. 10 வினாடிகளில் கியர்களை மாற்றலாம் என்று சென் யுகாங் தெரிவித்தார். எதிர் எதிர் உட்கார்ந்தபடி சைக்கிளை ஓட்டுகிற சைக்கிளை தயாரிப்பதற்காக அவர் சைக்கிள் தொழிற்சாலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் இதில் ஆர்வம் காட்டியதாக தெரிவித்த அவர் விரைவில் இத்தகைய சைக்கிள்கள் மார்க்கெட்டுக்கு வரும் என்று அவர் கூறினார்.

Dailythanthi

No comments: