அமெரிக்காவில், செல்ல நாயை தாக்க வந்த பெரிய நாயின் மூக்கை கடித்து குதறி விட்டார் ஒரு பெண்.
அமெரிக்காவில், மின்னபோலிஸ் பகுதியில் வசிப்பவர் ஹாமை ரைஸ். இவர் லேபரடார் வகை நாயை, செல்லமாக வளர்த்து வருகிறார். அதற்கு, "எலா' என்று பெயரிட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டின் முன்பகுதியில் உள்ள தோட்டத் தில் "எலா' விளையாடிக் கொண்டிருந்தது. காதில் ஹெட்போன் மாட்டியபடி, ரைஸ், இசையை கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, பெரிய நாய் ஒன்று, வீட்டின் வேலியை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தது. "எலா' நாயின் கழுத்து பகுதியை கொடூரமாக கவ்வியது. "எலா' போட்ட சத்தத்தில், ரைஸ் அதிர்ந்து விட்டார். அடுத்த வினாடி, நிலைமையை உணர்ந்து, பெரிய நாயிடம் இருந்து, செல்ல நாயை மீட்க போராடினார்.ஒரு கட்டத்தில், பெரிய நாயின் மூக்கு பகுதி, ரைசின் முகத்துக்கு நேரே வந்தது. உடனே, அதை கடித்து விட்டார் ரைஸ். வலி தாங்க முடியாமல், ஒரு ஓரத்தில் சுருண்டு படுத்து விட்டது பெரிய நாய். தற்போது அந்த நாய், பிராணிகள் சங்க பாதுகாப்பில் உள்ளது. அதற்கு, "ராபீஸ்' நோய் தொற்று உள்ளதா என, சோதனை செய்கின்றனர். "ராபீஸ்' நோய் தொற்று இருந்தால், ரைசுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது இருக்கும்.செல்ல நாய் கடுமையாக காயம் அடைந்து இருந்ததால், ரைஸ் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
Thinamalar
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment