கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக் காக சென்னை மெரினா கடற்கரை யில் உள்ள விவேகானந்தர் இல் லத்தை கருணாநிதி அபகரிக்க முயற்சி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட் டியுள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கி ழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ் செம்மொழி மையத்தில் கனி மொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பி னர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தந்து அதன் மூலம் விவேகானந்தர் இல்லத்தை தனது குடும்ப சொத் தாக்க கருணாநிதி முயற்சி செய்து வருகிறார்.
இந்தியத் திருநாட்டின் பெரு மையை உலக அரங்கில் உயர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள "ஐஸ் ஹவுஸ்' என்ற இடத்தில் 10 நாட்கள் தங்கியிருந்தார்.
அந்த இடத்தில் சுவாமி விவேகா னந்தரின் போதனைகளை எடுத்துக் காட்டும் வகையில் ஓவியங்களும், விளக்கங்களும் கொண்ட அருங்காட் சியகம் அமைக்க, தமிழக அரசு அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தது.
பொதுமக்களிடம் ரூ. 65 லட்சம் நிதி வசூலித்தும், மடத்தின் நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் செலவிட்டும் அந்தப் பணியை ராமகிருஷ்ண மடம் செய்து முடித்தது. "விவேகானந்தர் இல்லம்" என்று அழைக்கப்படும் அந்த இடம் தற்போது சுற்றுலாப் பய ணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகி றது.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க விவேகானந்தர் இல்லத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும். செம் மொழி ஆய்வு மையம் அமைக்க அந்த இடம் தேவைப்படுகிறது என் றும், விவேகானந்தர் இல்லத்தை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேறு கட்டடத்துக்கு மாற்றிக் கொள்ளுமா றும் ராமகிருஷ்ண மடத்துக்கு ஆலோசனை வழங்கியதாகவும், நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஏப் ரல் 24-ம் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி யதாகவும் செய்திகள் வந்துள்ளன.
முதல்வர் கருணாநிதியின் இந்த செயல் புனிதரான சுவாமி விவேகா னந்தரை திட்டமிட்டு அவமதிப்பது போல் உள்ளது. தமிழ் மொழி, செம் மொழி என்று ஆரம்பித்து கனிமொ ழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வாங்கித் தந்ததுதான் மிச்சம்.
மெரினா கடற்கரையில் பிரம்மாண் டமாக காட்சி அளிக்கும் விவேகானந் தர் இல்லத்தை குறுக்கு வழியில் அபக ரித்து விடலாம் என்று கருணாநிதி திட்டமிடுகிறார் போலும். அவரின் இந்தச் செயலுக்கு எனது கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் ஜெயல லிதா குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, April 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment