ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஒலிம்பிக் போட்டியில் தங்க விருது வென்ற அலினா கபாயெவாவை (24 வயது) திருமணம் செய்யப் போவதாக செய்தி வெளியிட்ட ரஷ்ய பத்திரிகை நேற்று முன்தினம் சனிக்கிழமை மூடப்பட்டுள்ளது.
மேற்படி "மொஸ்கோவ்ஸ்கி' பத்திரிகையின் ஆசிரியர் ஜிரிகோரி நெக்ஹொரோ ஷெவ் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டதையடுத்தே அப்பத்திரிகை மூடப் பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங் களாக விளாடிமிர் புட்டினுக்கும் (55 வயது) அலினாவுக்கும் இடையேயுள்ள காதல் நெருக்கம் குறித்து பல் வேறு கிசுகிசுக்கள் உலா வருகின்ற நிலையில், இதுவரை எந்தவொரு பத்திரிகையும் அவ்விடயம் குறித்து பிரசுரிக்க துணிய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப் பத்திரிகை யானது விளாடிமிர் புட்டின் தனது மனைவி லுமில்லாவை (50 வயது) இரகசியமாக விவாகரத்து செய்துவிட்டார் எனவும், அலினாவை எதிர் வரும் ஜூன் மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளி யிட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment