Sunday, April 20, 2008

நளினியின் மகள் லண்டனிலா? நோர்வேயிலா? உளவுத்துறை திணறல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் வழக்கில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்வி பேரில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டவரான நளினியின் மகள் அரித்ரா, தற்போது லண்டனிலா அல்லது நேர்வேயிலா உள்ளார் என உளவுத்துறை பொலிஸார் திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினியை கடந்த மாதம் 19ஆம் திகதியன்று ராஜீவின் மகளான பிரியங்கா சென்று சந்தித்துள்ளார்.

இவர்களது சந்திப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நளினியின் மகள் அரித்ரா மெகரா தற்போது எங்கு இருக்கிறார் என்பது மர்மாக உள்ளது. அவர் வசிக்கும் இடத்தை உளவுத்துறை பொலிஸாரால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது அரித்ரா சிறையில் இருந்து முருகனின் தாயாருடன் வெளியே சென்றார். அவரை முதலில் இலங்கைக்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர்.பின்னர் அவரை லண்டனுக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. எனினும் அரித்ரா தற்போது லண்ட னில் இல்லை. ஒருவேளை அவர் நோர்வேயில் தங்கி இருக்கலாம். அவர் வசிக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.இன்னொரு உளவுத்துறை அதிகாரி கூறும்போது அரித்திரா 4 மாதங்க ளுக்கு முன்பு நோர்வேயில்தான் இருந்தார்.

தற்போது எங்கு இருக்கிறார் என்பது உறுதி யாக தெரியவில்லை என்றார்.

No comments: