கடந்த மாதம் 19 ஆம் திகதி சிறைச்சாலை விதிமுறைகளை மீறிய நிலையில் நளினியை பிரியங்கா சந்தித்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பி ரமணிய சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அதிக பாதுகாப்பு நிறைந்த வேலூர் சிறைச்சாலைக் குள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நளினியை, பிரியங்கா காந்தி எந்தவித மான அனுமதியும் இன்றி சந்தித் துள்ளார். இந்த சந்திப்பை சிறைத் துறை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தீவிரவாதிகள் அடைக்கப் பட்டுள்ள வேலூர் சிறைக்குள் முன் அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்த பிரியங்கா மீது தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மே 21 ஆம் திகதிக்குள் இது சம்பந்தமாக தமிழக அரசு நடவடிக்கை மேற் கொள்ளாவிட்டால் நான் சட்டப் படி நீதிமன்றில் வழக்கு தொடருவேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment