அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்ப டைகள் இராக்கில் படையெடுத்து கடந்த மார்ச் 20ஆம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறை வடைந்துவிட்டன.
புயலுக்குப் பின் அமைதி என்பார்கள்.
ஆனால், போர் சில மாதங்களிலேயே முடிவடைந்து, 5 ஆண்டுகளாகியும் இராக்கில் அமைதி ஏற்படுவதற்கான அறிகுறியே தெரிய வில்லை.
நாள்தோறும் குண்டுவெடிப்புகள், தற்கொலைப்படை தாக்குதல்கள், துப்பாக்கிச் சண்டைகள் என மனித உயிர்களைக் காவு வாங் கும் கோரம் தொடர்கிறது.
இந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் கூட்டுப் படையினர் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர்.
20 லட்சம் இராக்கியர்கள் வீடுகளை இழந்து அகதிகளாக ஜோர்தான், சிரியா உள் ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந் துள்ளனர்.
இராக்கில் தற்போது சுமார் 40 லட்சம் பேர் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் பாதிக் கப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி...
பெரும் கேள்விக்குறி.
கடந்த 5 ஆண்டுகளில் போருக்காக அமெ ரிக்கா செலவுசெய்துள்ள தொகை 400 பில்லி யன் டாலர்கள் (ஒரு பில்லியன்-100 கோடி).
இந்த நிதியாண்டுக்கே இன்னும் ஏராள மான நிதியை அமெரிக்க நாடாளுமன்றத்தி டம் புஷ் கேட்டுள்ளார்.
இராக்கில் சுன்னி, ஷியா பிரிவுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள், அல்-காய்தா தீவிரவா திகள் என தீவிரவாதக் குழுவினர் நாளுக்கு நாள் தாக்குதலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.
அமெரிக்க கூட்டுப் படையினர் மட்டுமன்றி அப்பாவிப் பொதுமக் களும் இத் தாக்குதல்களுக்கு இரை யாகி வருகின்றனர்.
"அன்னியப் படைகளை இராக்கிலிருந்து விரட்டும் வரை ஓயமாட்டோம்" என அவ்வப் போது பின்லேடன் வேறு தொலைக்காட்சி யில் தோன்றி அச்சுறுத்தி வருகிறார்.
இச் சூழ்நிலையில் அமெரிக்கப் படைகள் இராக்கிலிருந்து வெளியேறி தாயகம் திரும்ப வேண்டும் என்ற பேச்சு வலுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் இருவ ருமே படைவிலகலுக்கு ஆதரவு தெரிவித்துள் ளனர்.
குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக் கெய்ன் இது குறித்து கருத்து எதுவும் தெரி விக்காவிட்டாலும், படைவிலகல் இல்லை என்ற புஷ்ஷின் கருத்தையே அவர் வழிமொ ழிவார்.
தற்போது சுமார் ஒன்றரை லட்சம் அமெ ரிக்க வீரர்கள் இராக்கில் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் 2007ஆம் ஆண்டு மட்டும் மிக அதிகமாக 900 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இதுதான் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்ப டுத்தி படைவிலகல் கோரிக்கையை வலுப்ப டுத்தியுள்ளது.
இராக்கின் பாதுகாப்பை அந்த நாட்டு அர சிடமே ஒப்படைக்கும் அளவுக்கு நிலைமை இன்னும் மேம்படவில்லை என்பதே புஷ் ஷின் வாதம்.
இராக்கின் எண்ணெய்வளம் மிகுந்த பாஸ்ரா நகரின் பாதுகாப்புப் பொறுப்பு இங் கிலாந்து படையினர் வசம்தான் இருந்துவந்தது.
அண்மையில் அந்நகரின் பாதுகாப்புப் பொறுப்பை, இராக் ராணுவத்தினரிடமே இங்கிலாந்து படையினர் ஒப்படைத்தனர்.
ஆனால், அந்நகரை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர தீவிரவாதிகள் கடும் தாக்குத லில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பாஸ்ரா நகரம் இராக்- ஈரான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தால், அதைப் பயன்படுத்தி தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இராக் ராணுவத்தில் போதுமான அளவு வீரர்கள் இல்லாதது, பயிற்சியின்மை, நவீன ஆயுதங்களைக் கையாளும் திறன் இல்லாதது என பல குறைபாடுகள் உள்ளன.
இராக் ராணுவம் பலப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, ராணுவத்திற்கு ஆள்சேர்க் கும் இடங்களில் கூடும் இளைஞர்களைக் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரு கின்றனர்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜனநா யகக் கட்சியின் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படும் பட்சத்தில் இராக்கிலிருந்து அமெரிக் கப் படைகள் வெளியேறுவது உறுதி. அப் படி வெளியேறினால், அதன்பிறகு ஆப்கா னிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி 5 ஆண்டுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத் திருந்தது போல, இராக்கையும் அல்-காய்தாக் கள் மற்றும் உள்ளூர் தீவிரவாதக் குழுவினர் பகுதி பகுதியாகக் கைப்பற்றிவிடும் அபாயம் உள்ளது.
இராக்கில் தங்கள் கைப்பாவை அரசு இருக்க வேண்டும் என்பதில் தீவிர அக்கறை காட்டும் அமெரிக்கா, இராக் மக்களின் பாது காப்புக்கு தாங்கள்தான் பொறுப்பு என்பதை யும் உணர வேண்டும்.
சதாமை ஆட்சியிலிருந்து அகற்றியது புஷ் ஷுக்கு வேண்டுமானால் வாழ்நாள் சாதனை யாக இருக்கலாம். ஆனால், அதைத் தொடர்ந்து இராக் மக்களை வாழ்நாள் முழு வதும் துயரத்தில் ஆழ்த்திவிடும் நடவடிக்கை களுக்கும் அவரே காரணம்.
போரைத் தொடங்கிய அமெரிக்காதான் இராக்கின் அமைதிக்கும் பொறுப்பு. சிக்க லான சூழ்நிலையில் உள்ள அமெரிக்கா என் னதான் செய்யப் போகிறது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
Thursday, April 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment