Thursday, April 17, 2008

"ஹரி பொட்டர்" யாருக்குச் சொந்தம்?

"ஹரி பொட்டர்" என்ற கற்பனைப் பாத்திரம் யாருக்குச் சொந்தம் என்பதில் இரு தரப்பு மோதிக் கொண்டி ருக்கிறது.

1986-ம் ஆண்டு "ட்ரோல்' என்ற திரைப்படம் வெளியானது. ஜான் ப்யூச்லர் என்பவரது இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில், ஹரி பொட்டர் ஜூனியர் என்ற சிறுவன் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருந்தது. படம் சரியாக ஓடவில்லை.

இதற்கிடையே, 1990-களின் மத்தியில் ஜே.கே.ரோலிங் என்ற பெண் எழுத்தாளர், ஹாரிபாட் டர் நாவலை எழுதி வெளியிட்டார். இந்தப் புத்தகம் பரபரப் பாக விற்பனையாகவே, இந்த நாவலை படமாக்கும் உரி மையை "வார்னர் பிரதர்ஸ்' நிறு வனம் பெற்றது.

ஜே.கே. ரோலிங்கின் நாவல் கள் பல பகுதிகளாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது போல, அதை மையமாக வைத்து வார்னர் பிரதர்ஸ் தயா ரித்த திரைப்படங்களும் வசூ லைக் குவித்தன.

இந்த நிலையில், தனது "ட்ரோல்' படத்தை மீண்டும் உருவாக்க (ரீமேக்) ஜான் அறிவித் தார். இது வார்னர் நிறுவனத் துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
ஹரி பொட்டர் கதாபாத்திரத்தின் உரிமை தங்களிடம் உள்ள தாகவும், அதனால், ஜான் எச்ச ரிக்கையுடன் செயல்படவேண்டும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே, புதிய "ட்ரோல்' படத்தில் ஹரி பொட்டர் வேடத்தில் நடிப்பதற்காக குழந்தை நட்சத்திரத்தை தேடும் பணியில் ஜான் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் பணியில் அவருக்கு ஆதரவாக பீட்டர் டேவி என்ற தயாரிப்பாளர் இருக்கிறார்.
முதல் முதலாக ஹாரி பாட் டரை உருவாக்கியது ஜான்தான் என பீட்டர் டேவி உறுதியாகக் கூறி வருகிறார். அவர் உருவாக் கிய ஹரி பொட்டருக்கும் ரோலிங் உருவாக்கிய ஹரி பொட்டருக்கும் அனேக ஒற்றுமைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் ட்ரோல் படத்தை இதுவரை தாம் பார்த்ததில்லை எனக் கூறிவரும் ஜே.கே.ரோலிங், ஹரி பொட்டர் தனது சொந்தப் படைப்பு என்கிறார்.

No comments: