Wednesday, April 9, 2008

இறந்தவர்களுக்கு காணிக்கையாகும் கவர்ச்சி உள்ளாடை

கோலாலம்பூர்:மலேசியாவை சேர்ந்த சீன வம்சாவளியினர், மறைந்தோருக்கு கவர்ச்சிகரமான உள்ளாடைகளை காணிக்கையாக செலுத்துவது அதிகரித்து வருகிறது.

மலேசியாவை சேர்ந்த சீன வம்சாவளியினர், இறந்து போனவர்கள், மரணத்துக்கு பிறகும் நிம்மதியாக இருப்பதற்கு, பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்துவர். பேப்பர் கரன்சி நோட்டு, மாதிரி வீடுகள், மாதிரி கார்கள், மொபைல் போன்களை, மறைந்தவர்களின் கல்லறை முன் எரிப்பது வழக்கம். இதன் மூலம், இறந்து போனவர்கள் கவுரவிக்கப்படுவதாகவும், அவர்கள் மரணத்துக்கு பிறகும் நிம்மதியாக இருப்பதாகவும் நம்புகின்றனர்.இந்த வரிசையில் இறந்து போன பெண்களுக்கு, கவர்ச்சிகரமான உள்ளாடைகளை காணிக்கையாக செலுத்தத் துவங்கினர். தற்போது, அதிகளவில் காணிக்கையாக செலுத்தப்படுவது உள்ளாடைகள் தான்.

No comments: