Saturday, April 19, 2008

பிரியங்காவுக்கு நளினியால் ஆபத்து ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு?

நளினியை சந்தித்த வேளையில் பிரியங்கா உயிருக்கு நளினியால் ஆபத்து ஏற்பட்டிருந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது. தமிழக அரசின் உளவுத்துறையின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நளினி பிரியங்கா சந்திப்பின் பின்னால் இருக்கும் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.
மறப்போம் மன்னிப்போம் என்ற பண்பை, இந்திரா காந்தி குடும்பத்தினர் இன்னும் கட்டிக் காத்து வருகிறார்கள் என்பதை வெளிக்காட்டிய இன்னொரு நிகழ்ச்சிதான் அந்தச் சந்திப்பு.

ஆனால், நான் அந்தச் சந்திப்பை விமர்சனம் செய்கிறேன். பிரியங்கா, வேலூர் வந்து போனது ரகசியமாக வைக்கப்பட்டு, ஏதோ ஒரு காரணத்துக்காக கசியவிடப்பட்டிருக்கிறது.

உச்சபட்ச பாதுகாப்பு வலயத்தில்இருக்கும் ஒரு பெண் எந்தச் சுவடும் இல்லாமல் வேலூர் சிறைக்கு வந்து, கொலை வழக்கில் குற்றம்சாட் டப்பட்டிருக்கும் பெண்மணியைச் சந்தித்துத் திரும்பியிருப்பது தேவையா என்பதுதான் என் கேள்வி.

அதுவும் பிரியங்காவும் நளினியும் பூட்டப் பட்ட ஒரு அறையில் யாருமில்லாமல் தனியாக பேசினார்கள் என்று தகவல்கள் வெளியாகின்றன. பல வருடங்களாக சிறையில் இருக்கும் நளினியின் மனநிலை எப்படி இருக்கும்? அன்புக்காக ஏங்கும் பெண்ணாக இருப்பாரா அல்லது சமூகத்தின் மீது வெறுப்பை உமிழும் ஆளுமையோடு மாறியிருப்பாரா என்று யாருக்கும் தெரியாது. இந்நிலையில் அவரைத் தனிமையில் சந்தித்துப் பிரியங்கா பேசியபோது நளினியால் ஏதும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும். தமிழகத்தில் மீண்டும் ஒரு பரிதாபம் என்று அனைத்துலக ரீதியில் நம் மாநில மானம் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கும்.

ராஜீவ் கொலையால் ஈழத்தமிழர்கள் ஏற்கனவே பல இடர்ப்பாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜீவைக் கொன்றது விடுதலைப்புலிகள்தான் என்ற ஒரு தோற்றம் இன்னும் மறையாமல் ஈழப் பிரச்சினை இழுத் துக்கொண்டிருக்கிறது. ராஜீவ் கொலை நடந்து இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு அக்கொலையில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவரை பிரியங்கா இப்போது சந்திப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டு விடப்போகிறது? இருவரும் சந்தித்தபோது என்னென்ன பேசிக் கொண்டார்கள் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் பிரியங்கா நளினி சந்திப்பால் ஈழப் பிரச்சினையில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் தனிப்பட்ட பயணம், சந்திப்பு என்று சொல்லும் பிரியங்காவுடன் ஏன் மத்திய அரசின் உயரதிகாரிகள், உளவுத்துறையினர் எனப் பெரும் படையே வந்தது? பிரியங்கா வெளிப்படையாக நளினியைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். அவர் அப்படி வந்து போவதை தமிழக மக்கள் யாரும் எதிர்க்கமாட்டார்கள்.

இந்நிலையில் ராஜீவைக் கொன்றது புலிகளே அல்ல என்ற கருத்தும் வாதமும் வேறு நீண்டு கொண்டுதான் இருக்கிறது. அந்த விவாதத்துக்கு விடைதேடித்தான் பிரியங்கா வேலூ ருக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் அதனை அறிய இதுதான் சரியான முறையா என்பதுதான் என் கேள்வி.

எல்லா விஷயத்தையும் முன்கூட்டியே கண்டுபிடிப்பதுதான் உளவுத்துறையின் வேலை.

ஆனால் பிரியங்கா வருகை பற்றி மாநில உளவுத்துறைக்கு ஏதாவது தகவல் முன் கூட்டியே தெரியுமா? அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.

பாவம், முக்கியமானவர்களின் தொலைபேசி களை ஒட்டுக்கேட்டு அதைக் குறிப்புகளாக்கி மேலிடத்துக்கு அனுப்புவதற்குதானே அவர்களுக்கும் நேரம் சரியாக இருக்கிறது.

No comments: