தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் கச்சத்தீவுக்குக் கைகால்கள் முளைத்து விடும். இந்தப் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் எல்லை கடந்து வரக் கூடாது என்று இலங்கை கடற்படை எச்சரிக்கை செய்துள் ளது. இதுபோதாது என்று இலங்கை மீனவர் களும் எச்சரிக்கை செய்யும் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
கச்சத்தீவைச் சுற்றிய கடற்பகுதிகளே மீன்வ ளம் மிகுந்த பகுதியாக இருப்பதால் தங்கள் தொழில் உரிமையை இழக்க இவர்கள் தயா ராக இல்லை; ஆண்டாண்டு காலமாக பல தலைமுறைகளாக இருந்து வரும் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது இங் குள்ள மீனவர் சங்கங்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் லட்சக்கணக்கான கட லோர மீனவர்களின் கதி என்ன? தமிழ்நாட் டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங் கைக்கு விட்டுக் கொடுத்ததே இத்தனை துய ரங்களுக்கும் காரணம் என்னும் மறுபரிசீ லனை மறுபடியும் விவாதத்துக்கு வந்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச் னையை எழுப்பியுள்ளனர்; தமிழக அரசியல் கட்சிகளும் இப்பிரச்னை பற்றிய கோரிக்கை களை எழுப்பத் தொடங்கியுள்ளன.
கி.பி. 1480-ம் ஆண்டு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக ராமேஸ்வரம் தீவும், அதைச் சுற்றி 11 தீவுகளும் தோன்றியுள் ளன. இத்தீவுகள் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்துதான் துண்டிக்கப்பட்டன என்று ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
இந்தத் தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு என் பது. ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையிலிருந்து 13 மைல் தொலைவிலும் உள்ளது.
இது கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும், வடக்கு தெற்காக அரை மைல் தூரமும் கொண்டது. இதன் பரப்பளவு 3.75 சதுர மைல், அவ்வளவுதான்.
இந்தத் தீவுகள் எல்லாம் இந்தியாவுக்கும், ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும் சொந்த மாக இருந்தன. ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு வருவாய் தரும் தீவுகளாக இருந்தன.
1947-ல் நாடு விடுதலையடைந்ததும் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டம் வந்தது. அத னால் மன்னரின் உடைமைகள் மக்கள் உரிமையானது.
சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் இருந்தவரை இந்தத் தீவு முத்துக்குளிக் கும் இடமாகப் பயன்பட்டு வந்தது.
அத்துடன் சித்த மருத்துவத் துக்குப் பயன்படும் மூலிகைகளின் சோலைவனமாகவும் இருந்தது.
ராமநாதபுர மக்கள் "உமிரி' என்ற செடிவ கையைத் தீராத நோய்களுக்குச் சிறந்த மருந்தாக நம்பினர். அத்துடன் "சாய வேர்' போன்ற வேர் வகைகளும் பயன்பட்டன.
இந்தத் தீவுக்குச் சென்று இந்த மூலிகைக ளைக் கொண்டு வருவதையே தொழிலாகச் சோழ மண்டல மரக்காயர்கள் கொண்டிருந்தனர்.இங்கே முத்துக்குளிக்கவும், மூலிகைக ளைக் கொண்டு வரவும், மீன் பிடிக்கவும் விரும்பினால் சேதுபதி மன்னரின் அனுமதி பெற வேண்டும். அவர்கள் குத்தகைக்கு விட்டு வருவாய் பெற்றதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்து வந்ததற்கு 1822 முதல் ஆவணச் சான்றுகள் உள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனி, 1822இல் ஓர் ஒப்பந்தம் மூலம் ராமநாதபுரம் மன்னரிடமிருந்து கச்சத்தீவைப் பயன்படுத் திக் கொள்ளும் இசைவைப் பெற்றது. 69 கடற்கரை ஊர்களும், 8 தீவுகளும் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன.
அந்த எட்டுத் தீவுகளில் ஒன்றுதான் கச்சத் தீவு.
இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கையைப் பற்றி வெளியிடப் பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல் லைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, கச்சத் தீவு குறிக்கப்படவில்லை. ராமநாதபுரம் அரச ரைப் பற்றிய குறிப்பில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனை முன்னாள் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.ஈ.
பியரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.இலங்கையின் பழைய வரலாற்று ஆவணங்களில் இத்தீவைப் பற்றிய விவரம் ஏதுமில்லை. டச்சுக்காரர் கள் மற்றும் போர்த்துகீசியர் கள் இலங்கையை ஆண்ட போது அவர்களின் ஆட்சி எல்லைக்குள் கச்சத்தீவு இடம் பெற்றிருக்க வில்லை. அவர்கள் ஆட்சி ஆவணங்களிலோ, குறிப்பேடுகளிலோ "கச்சத்தீவு' குறிப்பிடப்ப டவில்லை.
17-ம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கை வந்த வரலாற்று ஆய்வாளர் பர்னோஃப், அந் நாட்டின் தேசப்படம் ஒன்றை உருவாக்கினார்.
இலங்கையின் வரலாற்று நூல்களான மகா வம்சம், ராஜாவளி, ராஜரத்னாசரியை இவற் றின் துணையோடு அவர் உருவாக்கிய தேசப் படத்தில் "டெல்த் தீவு' வரைதான் இலங்கை யாக காட்டப்பட்டுள்ளது. டெல்த் தீவுக்கு அப்பாலுள்ள கச்சத்தீவு காட்டப்பட வில்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரேபியர்களும், ஐரோப்பியர்களும் வணி கம் செய்ய இலங்கைக்கு வந்தபடி இருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வந்த தாலமி, பிளினி ஆகியோர் இலங்கையின் கடற்பகுதி மற்றும் உட்பகுதிகளைத் தேசப்படங்களாக வரைந்தனர். அவர்கள் வரைந்த இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவு குறிப்பிடப்பட வில்லை.
ராமநாதபுரம் மன்னருக்கு உரிமையுடைய கச்சத்தீவு, ஆங்கில இந்திய அரசோடு ராமநா தபுரம் சமஸ்தானம் இணைந்தபோது இந்தி யாவோடு சேர்ந்துவிட்டது. இந்தச் செய் தியே அப்போதைய மத்திய அரசுக்குத் தெரிய வில்லையா? 1974-ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந் திரா காந்தி - சிறிமாவோ பண்டார நாயக ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமாக ஆக்கப்பட்டது.
அதன் பின்னர் இருநாடுகளின் அதிகாரிக ளுக்கு இடையே மீன் பிடிக்கும் உரிமை பற்றி கடிதப் போக்குவரத்து நடந்தது. இந்தக் கடி தங்களே 1976 ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. இதன் மூலம் முதல் ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட உரிமைகளும் பறிக்கப்பட் டன.
இலங்கையின் இனக்கலவரம் உள்நாட்டுப் போராக உருவெடுத்ததும், இந்திய - இலங்கை கடல்வழிப் பாதை முக்கியத்துவம் பெற்றது.
இலங்கை தமிழ் அகதிகள் வருகை, போரா ளிகளுக்கு ஆயுத உதவி எனக் காரணம் காட்டி இலங்கை கடற்படை முடுக்கி விடப் பட்டுள்ளது. இதனால் கடுமையாகப் பாதிக் கப்படுபவை தமிழக மீனவர்களின் தொழி லும், வாழ்வும்.
"தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச் சத்தீவை மீட்போம்' என்ற முழக்கத்தை அப் போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு முன்வைத்தது. 1991-ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு கோட்டையில் கொடி யேற்றிய அப்போதைய முதல்வர் ஜெயல லிதா "கச்சத்தீவை மீட்போம்' என்று சூளு ரைத்தார்.
1991 அக்டோபர் 4 அன்று சட்டப்பேர வையில் கச்சத்தீவை இலங்கை அரசிடம் இருந்து மீட்கக் கோரும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஆளுநர் உரையிலும் அறி விக்கப்பட்டது.
இப்போது தமிழக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். சர்வதேசக் கடல் எல் லையைக் கடந்து செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வருகிறது.
எனினும் கச்சத்தீவுக்கு அருகில் ஏராள மான மீன்கள் கிடைக்கின்றன என்பதால் செல்கிறார்கள். கச்சத்தீவு நீண்ட காலத்துக்கு முன் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி பகு தியாக இருந்து வந்துள்ளது என அதில் குறிப் பிட்டுள்ளார்.
வரலாற்றுக் காலம் தொட்டு தமிழக மீன வர்களின் தாய் வீடாக இருந்துவரும் கச்சத் தீவை மீட்க வேண்டும் அல்லது 1974 ஒப்பந்த விதிகளின்படி மீன் பிடிப்பதற்கான உரிமைக ளையாவது பெற்றுத் தர வேண்டும்.
தமிழக அரசு இனிமேலும் காலதாமதம் செய்யக் கூடாது. தாமதம் மனித உயிர்களையே மலிவாக்கிவிடும்.
Wednesday, April 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment