Friday, April 18, 2008

இன்டர்நெட் பழக்கம் விபரீதத்தில் முடிந்தது


விபசார அழகியின் திடுக்கிடும் பின்னணி

சென்னை: சென்னை தொழில் அதிபரை, பல வகையிலும் ஏமாற்றிய ஐதராபாத் விபசார அழகி குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர், ஆண் நண்பர்கள் மூலம், ஜாமீன் பெற்று விட்டார்.சென்னை அண்ணாநகர், கிழக்கு நான்காவது தெருவைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் சுகுமார் ஜார்ஜ்; திருமணமானவர். மனைவி மற்றும் குடும்பத்தார் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். சென்னையில் தனியாக வசித்த சுகுமார் ஜார்ஜ், "ஸ்கை ஹோம் பில்டர்ஸ்' என்ற கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் மாடலிங் அழகி சிமி குமார். இன்டர்நெட்டில், "சாட்டிங்' செய்யும் போது சிமி குமாரின் நட்பு, சுகுமார் ஜார்ஜுக்கு கிடைத்தது. சிமி குமார், தன்னை பற்றி, "மிசஸ் ஐதராபாத்' பட்டம் பெற்றவள்; கணவரை பிரிந்து வாழ்கிறேன். 15 வயதில் மகள் உள்ளார்' என, தெரிவித்துள்ளார். இதன் பிறகு, சிமி குமார், சுகுமார் ஜார்ஜ் சந்திப்பு சென்னையில் நடந்தது. சுகுமார் ஜார்ஜுடன் அன்பாக பழகினார் சிமி குமார். அண்ணாநகர் வீட்டில் தங்கி, வேண்டிய உதவிகளை செய்தார். கட்டுமான நிறுவனத்திலும் பணியாற்றினார். ஓராண்டு பழக்கத்துக்கு பிறகு, 2006ம் ஆண்டு, திருமணம் செய்து கொள்ள, இருவரும் முடிவு செய்தனர்.


சொத்துகளை எழுதி வையுங்கள்: "திருமணத்தை, ஐதராபாத்தில் நடத்த வேண்டும்' என, நிபந்தனை விதித்தார் சிமி குமார். நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் விமானம் மூலம் ஐதராபாத் சென்றார் சுகுமார் ஜார்ஜ்; திருமணமும் நடந்தது. நட்சத்திர ஓட்டலில் இருவரும் தங்கினர்.காலை 5 மணிக்கு எழுந்த சிமி குமார், "செல்ல நாய்க்கு உடம்பு சரியில்லை. அதை, மகனாக வளர்த்து வருகிறேன். உடனே வீட்டிற்கு செல்ல வேண்டும்' என கூறி விட்டு சென்றார். பல மணி நேரம் ஆகியும் அவர் ஓட்டலுக்கு வரவில்லை. சிமி குமாரின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டார் சுகுமார் ஜார்ஜ். அப்போது சிமிகுமார், "ஏற்கனவே திருமணமான உங்களுக்கு வயதாகி விட்டது. எனது எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறேன்.


எனது பெயரில், ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துகளை எழுதி வையுங்கள்' என பேசி அதிர்ச்சி கொடுத்தார்.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுகுமார் ஜார்ஜ், உறவினர்களுடன் சென்னை திரும்பினார். தொடர்ந்து சென்னைக்கு வரும்படி சிமி குமாருக்கு பல முறை அழைப்பு விடுத்தார். ஆனால், சிமி குமாருக்கு, சுகுமார் ஜார்ஜ் பெயரில் இருந்த பல கோடி ரூபாய் சொத்துக்கள் மீது தான் ஆர்வம் இருந்தது. சேர்ந்து வாழ மறுத்தார்.

நிரந்தரமாக பிரிய முடிவு: சேர்ந்து வாழ்ந்தால் தான் சொத்து தருவேன் என்பதில், சுகுமார் ஜார்ஜ் உறுதியாக இருந்தார்.அதனால் இறங்கி வந்த சிமி குமார், "ஐதராபாத் வந்து என்னுடன் தங்குங்கள்' என, அழைப்பு விடுத்தார். இதை நம்பிய சுகுமார் ஜார்ஜ், ஐதராபாத் சென்றார்; மாதம் ரூ.40 ஆயிரம் வாடகைக்கு வீடு பிடித்து தங்கினார். சொத்து கேட்டு சிமிகுமார் கொடுத்த தொந்தரவால் சில நாட்களில், சுகுமார் ஜார்ஜ் சென்னை திரும்பினார். ஐதராபாத் வாடகை வீட்டில் சிமி குமார் தங்கினார்.இந்த வீடு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சொந்தமானது. அந்த வீட்டுக்கு அடிக்கடி வாலிபர்கள் வருவதை, அதிகாரி அறிந்தார். உடன், சுகுமார் ஜார்ஜுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "உங்கள் மனைவியுடன் பல வாலிபர்கள் தங்கி செல்கின்றனர். வீட்டில் விபசாரம் நடப்பதாக சந்தேகிக்கிறேன். உடனடியாக வீட்டை காலி செய்து, மனைவியை அழைத்துச் செல்லுங்கள்' என எழுதப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த சுகுமார் ஜார்ஜ், சிமி குமாரிடம் இருந்து நிரந்தரமாக பிரிய முடிவு செய்தார். அவர் வெளிநாடு சென்றிருந்த போது, சென்னைக்கு வந்தார் சிமி குமார். ஏற்கனவே அண்ணா நகர் வீட்டில் ஓராண்டு தங்கி இருந்ததால், வீட்டு வேலையாட்கள் சிமி குமாரை அன்புடன் வரவேற்றனர். வீட்டில் இருந்த," பர்னிச்சர்'கள் மற்றும் பொருட்களை, லாரி மூலம், ஐதராபாத் கொண்டு சென்று விட்டார் சிமி குமார்.

"வயாக்ரா மாத்திரை கொடுத்து செக்ஸ் வெறியை தூண்டினார்':ஐதராபாத் விபசார அழகி சிமி குமார் குறித்து சுகுமார் ஜார்ஜ் கூறியதாவது:எனது சொந்த ஊர் திருநெல்வேலி. எனது தந்தை இலங்கையில் செங்கல் சூளையில் வேலை செய்து சம்பாதித்தவர். சென்னை நெற்குன்றத்தில் தந்தையின் பெயரில் ஒரு நகர் உள்ளது. நான் வளர்ந்தது, படித்தது ஆஸ்திரேலியாவில் தான். பெங்களூரில் வசித்த உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். 24 வயதில் மகன், 18 வயதில் மகள் உள்ளனர். அவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கின்றனர். மனைவி அவர்களை கவனித்து கொள்கிறார். எனக்கு ஆஸ்திரேலிய குடியியுரிமை உண்டு.இன்டர்நெட் "சாட்டிங்'கில், ஐதராபாத் மாடல் அழகி சிமி குமார் நட்பு கிடைத்தது. திருமணத்துக்கு பிறகு, ஐதராபாத்தில் மாதம் ரூ.40 ஆயிரம் வாடகை வீட்டில் தான் தங்குவேன் என அடம் பிடித்தார். அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டதால், சம்மதித்தேன். அப்போது, சிமி குமாரின் சதித்திட்டம் தெரியவில்லை. ஒரு சில நாட்களில் என்னை விரட்டி விட்டு, அந்த வீட்டில், விபசாரம் செய்து வந்துள்ளார்.


ஐதராபாத் வீட்டில், சிமிகுமாருடன் இருந்த போது, அவர் எனக்கு வயாக்ரா மாத்திரை கொடுத்தார். செக்ஸ் ஆசையில் இருந்த என்னை, மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்தார். என்னை கொலை செய்து விட்டு எனது சொத்துக்களை அபகரிப்பதே அவரது நோக்கம்.சிமி குமார் பற்றி தனியார் ஏஜென்சிகள் மூலம், பல தகவல்களை திரட்டினேன். அவரது முதல் கணவர் ராணுவ கேப்டன் லீத் சூர்த். இவர்களது திருமணம் 87ம் ஆண்டு நடந்தது. நான்கு மாதத்தில், மர்மமான முறையில் கேப்டன் லீத் சூர்த் இறந்தார். அது தொடர்பாக பஞ்சாப் ராணுவ கோர்ட்டில் வழக்கு நடந்தது.கர்னல் ரவிக்குமார் மேனன் என்பவரை, சிமி குமார் இரண்டாவது திருமணம் செய்தார். சில மாதங்களில் அவரை விவாகரத்து செய்து விட்டார். இதன் பின்னர் டில்லியைச் சேர்ந்த, ஹைடெக் விபசார புரோக்கர் சஞ்சீவ் மாலிக் என்பவருடன் சுற்றி வந்தார். வசதியானவர்கள் பற்றி விவரங்களை தெரிந்து கொள்ளும் சிமி குமார், அவர்களுடன் நெருக்கமாக பழகி வீழ்த்தியுள்ளார். வயதை கணிக்க முடியாத அளவுக்கு அவரது உடல் வாகு உள்ளது. என்னை ஏமாற்றி, பல லட்ச ரூபாய் சுருட்டி விட்டார். இந்த விவகாரத்தை விடப்போவதில்லை.இவ்வாறு சுகுமார் ஜார்ஜ் கூறினார்.



ஐதராபாத் மாடலிங் பெண்: சென்னை திரும்பிய சுகுமார் ஜார்ஜ், அண்ணா நகர் போலீசில், "வீட்டில் இருந்த பொருட்களை, எனது மனைவி திருடிச் சென்று விட்டார். அப்பொருட்களை மீட்டுத் தர வேண்டும்' என, புகார் கொடுத்தார். அண்ணா நகர் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், கோர்ட்டிற்கு சென்றார்.புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அண்ணா நகர் போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஐதராபாத்தில் இருந்த, சிமி குமாரை, சென்னைக்கு வர வைத்தனர் அண்ணாநகர் போலீசார். அவர் மீது, 408 மற்றும் 380 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கடந்த 4ம் தேதி கைது செய்தனர். இதன் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


ஐதராபாத் மற்றும் டில்லியில் இருந்து சென்னை வந்த சிமி குமாரின் ஆண் நண்பர்கள், அவருக்கு ஜாமீன் பெற்றனர். சிறையில் இருந்த சிமி குமார் கடந்த 11ம் தேதி விடுவிக்கப்பட்டார். அண்ணா நகர் போலீசில் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டது. காலை, வக்கீல்களுடன், அண்ணா நகர் போலீஸ் நிலையம் வந்த சிமி குமார் கையெழுத்திட்டு சென்றார்.

தினமலர்

No comments: