Friday, April 18, 2008

தவறான முன்னுதாரணம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி, முருகன் ஆகியோ ருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, அவர்களை மன்னித்து, தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் காரண மாக இருந்தவர் சோனியா காந்தி. தாயின் வழியில் மகளும் அன்பு காட் டியிருக்கிறார்.
ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான நளினியைச் சந்தித்துப் பேசியுள்ள, ராஜீவ் காந்தியின் மகள் பிரி யங்காவின் பரந்த மனப்பான்மையும் அன்பின் வெளிப்பாடும் பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், பாராட்டுக்குரிய இந்த நற்செயலை அவர் சட்டத் துக்கு உட்படாமல் செய்திருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்ப டுத்தியிருக்கிறது. பாராட்டுக்குரிய செயல் ஆட்சேபத்துக்கும் உள்ளா கியுள்ளது.

சிறை ஆவணங்களில் பிரியங்கா வருகைக்கான எந்தப் பதிவும் இல்லை என்று சிறை அதிகாரிகளே கூறுகின்றனர். ஆனால் அவர் வந் ததும், அவர்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் பத்திரிகைகளில் மற்ற வர் வாய்மொழியில் வந்துகொண்டிருக்கின்றன.
சில தினங்களுக்கு முன்பாகவே அவரது உறவினர் ஒருவர் பெய ரில் நளினியைச் சந்திக்கக் கடிதம் கொடுக்கப்பட்டு, அனுமதி பெறப் பட்டதாகவும், அனுமதி பெற்றவருடன் ""மற்றும் 3 பேர்'' என்று அனு மதி பெற்றிருந்ததாகவும், ஆகவே ஆவணங்களில் பெயர் இல்லாத போதிலும் அவர் முறைப்படிதான் சந்தித்துள்ளார் என்றும் சிறைத் துறையின் அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் உள்ள எந்த ஒரு கைதியையும் இதேபோன்று சிறைத் துறை அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிப்பார்களா என்பதும், மற் றும் சிலர் என்று எந்த விவரமும் தராமல் சிறைக்குள் நுழைந்துவிட முடியுமா என்பதும் கேள்விக்குரியது.

பிரியங்கா ஓர் இந்தியப் பிரஜையாக மட்டுமே அங்கே வந்துள்ளார்.
தான் நளினியைச் சந்தித்த விஷயத்தை, தன் தனிப்பட்ட விவகாரம் என்று அவரே குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா மிகமிக முக்கியமான இந் தியக் குடிமகள் என்பதாலும், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதா லும், அவர் வேலூர் வந்து, நளினியைச் சந்தித்து, தில்லி திரும்பிய வரை ரகசியம் காத்ததன் அவசியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், அவர் தில்லி சேர்ந்த பின்னரும்கூட இந்த விஷயத்தில் ரகசி யம் காத்தது ஏன் என்பதும், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒருவர் வழக்குத் தொடுத்த பின்னர்தான் இந்த உண்மை வெளியாகியிருப்ப தும் நெருடலைத் தருகின்றன.

இதே நடைமுறையை சாதாரணக் கைதிக்கு நீட்டிப்பார்களா என்று கேட்பது அதிகபட்ச எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால், இத்தகைய ரகசியங்களும், சட்டத்துக்கு உட்படாமல் செல்லும் விதிவிலக்குக ளும் சிறை அதிகாரிகளை மேலும் பல தவறுகளைச் செய்யத் தூண்டு வதாக அமைந்துவிடும்.

மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேயை, காந்தியடிக ளின் மகன் தேவதாஸ் காந்தி சிறையில் சந்தித்த சம்பவம் முன்னுதார ணம் காட்டப்படுகிறது. அப்போது, இதுபோலல்லாமல் தேவதாஸ் காந்தி முறையாக அனுமதி பெற்றுத்தான் கோட்சேயைச் சந்தித்தார் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்தச் சந்திப்பின்போது "ரா' உளவுப்பிரிவு அதிகாரிகள் உடன் இருந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போதும், இதனை ரகசியமாக நடத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்க்கும்போதும், இந்தச் சந்திப்பின் மூலம், ராஜீவ் படுகொலையை மனதில் நிறுத்தி இலங்கைப் பிரச்னையில் நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் நடத்தப் பட்ட சந்திப்பாகவே தோற்றம் தருகிறது.

இந்த மாறுதல் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதே. ஆனால், இதை இத்தனை ரகசியங்களுக்கும் ஊகங்களுக்கும் இடம் அளிப்ப தாக மாற்றியிருப்பதும், ஆவணங்களுக்குள் வராமலேயே சென்று வந்திருப்பதும் தவறான முன்னுதாரணங்களுக்கு வழி வகுத்துள்ளன.
என்னதான் நல்லெண்ணமும் காரணமும் இருந்தாலும், இது போன்று, விதிமுறைகளை மீறிய செயல் அரங்கேற்றப்படுவது தவறு.

இதற்கு அனுமதி அளித்தவர்களும், விதிமுறைகளை மீறி சந்திக்க உதவியவர்களும் தண்டனைக்குரியவர்கள். முறையான விசாரணை நடத்தப்பட்டு, தவறுக்குக் காரணமானவர்கள், அதாவது, முறைகே டாக அனுமதி வழங்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சட் டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்துவிடக் கூடாது.

தினமணி

No comments: