Friday, April 18, 2008

சர்வாதிகாரி ஹிட்லரின் ஹிட் லிஸ்டில் சாப்ளின்!


ஜெர்மனி சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லரின் (Adolf Hitler) ஹிட் லிஸ்ட்டில் மாபெரும் நடிகரான சார்லி சாப்ளினும் இருந்ததாக 1930ஆம் ஆண்டு வெளியான நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.யூதர்களை விரட்டி அழித்தவார் ஹிட்லர் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார்.அவரது ஹிட் லிஸ்ட்டில் ஏராளமான பிரபலங்கள் இடம்பெற்றிருந்தனர். புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் எய்ன்ஸ்டீனும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். அதேபோல யூத குலத்தைச் சேர்ந்த நடிகர் சார்லி சாப்ளினும் ஹிட்லரின் கொலைப்பட்டியலில் இடம் பெற்றிருந்ததாக ஒரு தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

ஜுடன் சேஹென் டிச் அன் (Juden sehen dich an) யூதர்கள் உன்னைக் கவனிக்கிறார்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள நூலில்தான் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

யூத எதிர்ப்புப் பிரசரகரான டாக்டர் ஜோகன்வான் லீர்ஸ்(Johann von Leers) என்பவர் இந்த நூலை எழுதியுள்ளார். இதில் ஹிட்லர் கொன்று குவிக்க வேண்டிய யூத பிரபலங்களின் பெயர்கள் புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளன.

இந்த நூல் 1930 ஆம் ஆண்டு பெர்லினில் வெளியிடப்பட்டது. இந்த நூலைப் பார்த்துத்தான் நாஜிப்படையினர் அதில் இடம்பெற்றிருந்தவர்களை தேடித் தேடிக் கொன்றனர்.

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் (Albert Einstein)பெயரும் இதில் இருந்தது.

இப்போது இந்த பழம்பெரும் கொலைப்பட்டியல் நூல் அடுத்த மாதம் லண்டனில் ஏலத்தில் விடப்படவுள்ளது.

ஹிட்லரின் கொலை பட்டியலில் யாரெல்லாம் இருந்தார்கள் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் ஹிட்லரின் துவேஷப்பட்டியலில் இடம் பிடித்திருந்தார்கள் என்பதை வெளியிட்டுள்ளார் ஜோஹன்.

யூத குலத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், கலைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும், இந்தக் கொலைப்பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நூலைப் பார்த்துத்தான் சார்லி சாப்ளின் தனது வெகு பிரபலமான தி கிரேட் டிக்டேட்டர் (The Great Dictator)படத்தை எடுத்தாராம். 1940 ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் டொமைனியா என்ற தேசத்தின் சர்வாதிகாரி அடினன்ட் ஹிங்கல் என்ற வேடத்தில் நடித்திருந்தார் சாப்ளின் இந்த வேடம் ஹிட்லரை இமிட்டேட் செய்து சித்தரிக்கப்பட்ட வேடம்.

இந்த நூல் யூதர்களை குறிவைத்து எழுதப்பட்டதாகும். ஜெர்மனி மக்களை யூதர்களுக்கு எதிராக போருக்குத் திருப்புவதற்காக எழுதப்பட்டதாகும். உலகை ஆக்கிரமிக்க நினைக்கும் யூதர்களை ஒழிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்ற நோக்கத்துடன் எழு தப்பட்டதாகும்.

இந்த நூலில் யூத இனத்தின் பிரபலங்கள் அவர்களின் புகைப்படங்களோடும், அவர்களைப் பற்றிய குறிப்புகளோடும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தப்பட்டியலில் சார்லி சாப்ளினும் இடம்பி டித்திருந்ததுதான் முக்கியமானது. இத்தனைக்கும் அவர் யூதரே கிடையாது. இருப்பினும் சாப்ளினின் பூர்வீகம் யூத குலம்தான். எனவே அவரும் ஒருவகையில் யூதர்தான். எனவே அவரையும் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று ஹிட்லர் கூறியுள்ளார்.

இந்த நூலைப் பார்த்த சாப்ளின் நிச்சயம் பயந்து போயிருக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்களை நாஜிக்கள் கொன்று தீர்த்து விட்டனர். இந்த நூல் குறித்து திரைப்பட ஆய்வாளர்கள் கெவின் பிரவுன்லா கூறுகையில், தனது பெயர் ஹிட்லரின் கொலைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதைப் பார்த்துத்தான் சாப்ளின் தி கிரேட் டிக்டேட்டர் படத்தையே எடுத்தார்.நாஜிக்கள் தவறுதலாக சாப்ளின் பெயரை இந்த நூலில் யூதர்களுடன் சேர்த்து இணைத்துள்ளனர். ஆனால், தான் யூதர் இல்லை என்று ஒரு போதும் சாப்ளின் கூறியதில்லை என்கிறார் அவர்.

No comments: