Wednesday, April 9, 2008

அதிசய நண்பர்கள்

அதிசயத்திலும் அதிசயமாக சீன விலங்கியல் பூங்காவில் ஆடு ஒன்றும், ஓநாய் ஒன்றும் நெருங்கிய நண்பர்களாகி இருக்கின்றனவாம். அந்நாட்டில் நான்ச்சாங் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட இந்த ஆடும், ஓநாயும் தற்செயலாக அறிமுகமாகி பின்னர் பிரிக்க முடியாத அளவுக்கு நண்பர்களாகி விட்டனவாம்.

விலங்கியல் பூங்கா ஊழியர் ஆட்டுக்கு தழைகளை போட சென்றபோது கவனக்குறைவாக ஓநாய் கூண்டை பூட்ட மறந்து விட்டாராம். இதனால் வெளியே ஓடி வந்த ஓநாய் ஆடு இருந்த கூண்டுக்குள் புகுந்து விட்டதாம்.

ஆனால் ஆட்டின் மீது பாயாமல் அதனை பாசத்தோடு பார்க்க தொடங்கிய தாம். முதலில் மிரண்டு போன ஆடு பின்னர் ஓநாயோடு நேசமாகி விட்டதாம்.

Wednesday, 09 April, 2008

Maalaisudar

No comments: